செங்கடல் வழியாக சவுதி அரேபியாவுக்கும், எகிப்துக்கும் இடையே பாலம் கட்டப்படும் என சவுதி அரேபிய மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக எகிப்து வந்துள்ள சவுதி அரேபிய மன்னர் சல்மான், அங்குள்ள 1,000 ஆண்டு பழமையான அல் அசார் மசூதி உள்ளிட்ட
பல்வேறு இடங்களுக்குச் சென்ற சல்மான், பிரசித்தி பெற்ற இஸ்லாமிய கல்வி நிலையத்துக்கும் சென்று பார்வையிட்டார்.
பின்பு நாட்டின் தலைமை மதகுருவான அஹமது அல் தையிப்பைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
அதன் பின் அதிபர் ஃபட்டா அல் சிசியைச் சந்தித்துப் பேசிய மன்னர் சல்மான், சவுதி அரேபியா- எகிப்து நாடுகளுக்கு இடையில் செங்கடல் வழியாகப் பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இருப்பினும் இப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது உள்ளிட்ட எந்த விவரத்தையும் அவர் வெளியிடவில்லை.