அமெரிக்கா லாஸ் ஏஞ்சலில் நாய்களுக்கென முதல் தேநீர் விடுதி திறப்பு !

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில், செல்லப்பிராணி நாய்களுக்கென முதல் முறையாக தேநீர் விடுதி திறக்கப்பட்டுள்ளது. 
அமெரிக்கா லாஸ் ஏஞ்சலில் நாய்களுக்கென முதல் தேநீர் விடுதி திறப்பு !
ஐப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் நாய்களைப் பாதுகாக்க உணவு விடுதிகள், கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. 

இதனால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பெண்மணி ஒருவர் லாஸ்ஏஞ்சலிஸ் நகரில், தெருக்களில் தனித்து விடப்பட்ட நாய்களை காப்பாற்றும் நோக்கில் தேநீர் விடுதி காப்பகத்தினை தொடங்கினார்.

பின்னர் நாய் வளர்ப்போர் இந்த தேநீர் கடைகளுக்கு நாய்களுடன் வரத்தொடங்கியதால், இந்த விடுதி எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது. 

இந்த தேநீர் விடுதிகளுக்கு வருபவர்களிடம் நுழைவு கட்டணமாக 600 ரூபாய் வசூலிக்கப் படுகிறது.

இதுபோன்ற தேநீர் விடுதிகளுக்கு நாய்களை அழைத்துச் செல்வதன் மூலம், வீடுகளிலேயே அடைபட்டு கிடக்கும் 
நாய்களுக்கு புத்துணர்ச்சியும், உடல் ஆரோக்கியமும் ஏற்படுவதாக அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தேநீர் விடுதியில் எஜமானர்கள் தங்களது நாய்களை அழைத்து வந்து தேநீர் அருந்தும் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
Tags:
Privacy and cookie settings