20.04.2016 அன்று நண்பகல் 4.00 மணியளவில் மதுரை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஹைதீன் நாசர் அவர்களுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வருகிறது.
அதில் மதுரை மாவட்ட புறநகர் பகுதியான பொட்டபாளையம் பகுதியில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் கடந்த ஆறு நாட்களாக கேட்பார் அற்று மயங்கிய நிலையில் கிடப்பதாகவும்,
புறநகர் பகுதி என்பதால் அவரை யாரும் கவனிப்பதில்லை எனவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தால் மட்டுமே அவருக்கு உதவி செய்ய முடியும் என்று அந்த அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் குறிப்பிட்டார்.
புறநகர் பகுதி என்பதால் அவரை யாரும் கவனிப்பதில்லை எனவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தால் மட்டுமே அவருக்கு உதவி செய்ய முடியும் என்று அந்த அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் குறிப்பிட்டார்.
இதை கேள்விப்பட்ட மதுரை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் நாசர் அவர்கள் சம்பவ இடத்திற்க்கு உடனடியாக விரைந்தார். அங்கு அலைபேசியில் சொல்லப்பட்டது போல் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அருகில் சென்றால் அந்த பெண்மணியின் மீது துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது. அதை ஒரு பொறுட்டாக கருதாமல் முதலில் இவரை நிழலுக்கு கொண்டு செல்லுவோம்
என முடிவெடுத்து அருகில் இருந்த சில நபர்களின் உதவியுடன் அருகில் இருந்த பேருந்து நிழற்குடையில் முதலில் அந்த மூதாட்டி கொண்டு செல்லப்பட்டார்.
என முடிவெடுத்து அருகில் இருந்த சில நபர்களின் உதவியுடன் அருகில் இருந்த பேருந்து நிழற்குடையில் முதலில் அந்த மூதாட்டி கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மயக்கத்தில் இருந்த அந்த மூதாட்டியின் முகத்தில் தண்ணீரால் அடித்து அவரை விழிக்க வைத்து பின்பு அவருக்கு பருகுவதற்க்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது.
மூதாட்டியின் உடல் மிக மோசமாக பதிக்கப்பட்டு இருந்தது இன்னும் இரண்டு நாள் இதே போல் மயக்க நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக மூதாட்டி மரணித்து இருப்பார்
என்பதை உணர்ந்த நாசர் அவர்கள் இவருக்கு மருத்துவ சிகிச்சை செய்தாக வேண்டும் என்று உடனடியாக 108 அரசு ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார்.

வந்த 108 அரசு ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர்களோ மூதாட்டியை பார்த்துவிட்டு பொறுப்பாளர் இல்லாத இவரையெல்லாம் நாங்கள் ஆம்புலன்ஸில் ஏற்ற மாட்டோம்.
விபத்து மற்றும் உயிருக்கு துடிப்பவர்களை மட்டும் தான் நாங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொள்வோம் என்று மனிதநேயமற்ற நிலையில் பேசவே, ஒரு உயிரின் உடைய மதிப்பை பற்றி அவர்களுக்கு எடுத்து சொல்லி இன்னும்
இரண்டு நாள் இந்த மூதாட்டியை இதே நிலையில் விட்டுவிட்டால் அவர் மரணித்து விடுவார் பின்பு அவருடைய பிரேதத்தை எடுக்க தான் நீங்கள் வர வேண்டும்
என்று உண்மை நிலையை அந்த அரசு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் எடுத்து கூறவே அரைமணி நேரத்திற்க்கு பிறகு நாம் சொல்லும் உண்மை நிலையை விளங்கி பின்பு அந்த மூதாட்டியை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டனர்.

பின்னர் மூதாட்டி மருத்துவத்திற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கும் மூதாட்டிக்கு மருத்துவம் செய்வதற்க்கு மறுக்கிறார்கள். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என்ன காரணம் சொல்லி மறுத்தார்களோ அதே காரணத்தை மருத்துவமனை ஊழியர்களும் சொல்லி மருத்துவம் செய்வதற்கு மறுக்கிறார்கள்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் மூதாட்டியின் நிலை குறித்து விவரித்தது போல மறுபடியுமாக மருத்துவமனை ஊழியர்களிடமும் அது விரிவாக பல மணிநேரம் நாசரால் எடுத்து சொல்லப்பட்டது.
பின்பு இறுதியாக பொறுப்பாளர் இருந்தால் தான் மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறவே, எங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் இந்த மூதாட்டிக்கு பொறுப்பாளர் என்று மதுரை மாவட்ட மருத்துவரணி நாசர் கூற, இறுதியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதை பார்த்த பொதுமக்கள் நிச்சயம் மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்று நம் ஜமாஅத்திற்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்தனர். அல்ஹம்ந்துலில்லாஹ்
” ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் “