ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரணமாக மாயமானார்.
தொடர்ந்து உறவினர்கள் புகாரின் பேரில் கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக மிகப்பெரிய் ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர்.
தான் 72 மணி நேரம் தான் திமிங்கிலம் வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறி உள்ளார்.
இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:
நான் இது வரை உயிருடன் இருந்தது ஆச்சரியமான விஷயம் தான்.நான் நல்ல குளிரிலும், இருட்டிலும் இருந்தேன். எனது வாட்டர் புரூப் வாட்சின் ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத் தான் சாப்பிட்டேன்.
அங்கிருந்த நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை. மூன்று நாட்கள் குளித்தால் தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.
இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம்தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கை விடாமல் கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தேன்.
இப்போது நான் மீண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.