டெல்லி வந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியமுடன் பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கினார். அதன் பிறகு வில்லியமின் கையில் மோடியின் கைத்தடம் பதிந்துவிட்டது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கடந்த 12ம் தேதி அவர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். மோடி அவர்களுக்கு மதிய விருந்து அளித்தார். அப்போது மோடி, வில்லியம், கேட் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
மோடி வில்லியமின் கையை பிடித்து குலுக்கியபடி போஸ் கொடுத்தார். அதன் பிறகு பார்த்தால் வில்லியமின் கையில் மோடியின் கை அப்படியே பதிந்திருந்தது தெரிய வந்தது.
வில்லியமின் சிவப்பு நிற கையில் மோடியின் கைபட்ட இடம் மட்டும் சில நிமிடங்களுக்கு வெள்ளையாக இருந்தது. அந்த அளவுக்கு மோடி உறுதியாக கை கொடுத்துள்ளார்.
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லா மோடியுடன் கை குலுக்கிய பிறகு நேராக சென்று கையை கழுவினார். ஒரு வேளை கைத்தடம் பதிந்தது தெரியாமல் இருக்க செய்திருப்பாரோ என்று தற்போது கூறப்படுகிறது.
நாதெல்லா மோடியுடன் கைகுலுக்கிய பிறகு கை கழுவியதை பார்த்து அமெரிக்காவில் வசிக்கும் மோடியின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.