உங்கள் ஸ்மார்ட்போனையே நீங்கள் பாஸ்போர்ட்டாக பயன்படுத்தலாம் !

பிரிட்டனை சார்ந்த வங்கிகளுக் கான பணம் மற்றும் பாஸ்போர்ட் போன்ற வற்றை அச்சடிக்கும் நிறுவனம் ஸ்மார்ட் போனில் டிஜிட்டல் பாஸ்போர்டை அறிமுகப் படுத்தவுள்ளது.


இப்பொழுது நடைமுறையில் இருக்கும் பாஸ்போர்ட்டானது பேப்பரினால் தயாரிக்கப்பட்டு சிறிய புத்தக வடிவம் கொண்டது.

இதனை பல நேரங்களில் பயணிகள் ஞாபக மறதியினால் வீட்டிலேயே வைத்துவிட்டு பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

இதனை தடுக்கும் விதமாக இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகப் படுத்தப்பட வுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் தயாரிப்பு பணிகள் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது என இப்பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பாஸ்போர்ட் மூலம் மோசடிகள் நடக்க வாய்புள்ளதால் அதனை தடுக்கத் தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் செய்துதரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட் விமானப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings