ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பெண்ணின் உச்சந்தலையில் கொம்பு முளைத்துள்ள அதிசய பெண்மணியை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தமிழகம்- கர்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில், சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட புனஞ்சனூரு பஞ்சாயத்தில் உள்ளது ஒசபோடு காலனி.
இந்த கிராமத்தில் சித்தேகவுடா என்ற விவசாய கூலித் தொழிலாளியின் மனைவி மாதம்மாளின் உச்சந்தலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 இஞ்ச் அளவில் கொம்பு ஒன்று முளைத்துள்ளது. இதனால் மாதம்மா, வெளியே வர அஞ்சி வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.
இதுகுறித்து சித்தேகவுடாவிடம் கேட்டபோது, மாதம்மாள் பிரச்சனை குறித்து எந்த மருத்துவரிடம் காண்பிக்கவில்லை என்றும், ஏழை குடும்பம் என்பதால் மருத்துவச் செலவு செய்ய முடியவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் மாதம்மாளுக்கு தலையில் கொம்பு முளைத்து பின்னர் விழுந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது 2 வது முறையாக மீண்டும் கொம்பு முளைத்துள்ளதால் கர்நாடக அரசு உரிய உதவி செய்ய வேண்டும் என்றும் சித்தேகவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.