​’ஜெயலலிதா - கருணாநிதிக்கு நானே எதிரி’ விஜயகாந்த் !

சென்னையை அடுத்த மாமண்டூரில் நடைபெற்ற தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் பேசிய விஜயகாந்த் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் பொது எதிரியாக தாம் விளங்குவதாகத் தெரிவித்தார். 
மேலும், கூட்டணி விவகாரத்தில் தாம் 1,500 கோடி ரூபாய் வாங்கியதாகக் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுத்துள்ளார்.

விஜயகாந்த் உரை:

சென்னை அடுத்த மாமண்டூர் அருகே தேமுதிக மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற 

இந்த கூட்டத்தில் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய முத்தரசன், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறும் கருணாநிதி, தமிழகத்தில் மது விற்பனையை மீண்டும் கொண்டுவர வர கையொப்பமிட்டது யார் என பதிலளிக்க வேண்டும் எனக் கூறினார்.

வைகோ உரை:

மாநாட்டில் பேசிய வைகோ, தேமுதிக மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால் கூடன்குளம் அணு உலை அகற்றப்படும் என்றும் மாணவர்களின் கல்விக் கடன் முழுவதையும் அரசே ஏற்கும் என்றார். 

2ஜி முறைகேட்டில் மு.க.ஸ்டாலின் பலன் பெற்றதாகவும் இந்த விவகாரத்தில் கனிமொழி பலிகடா ஆக்கப்பட்டதாகவும் வைகோ கூறினார்.

மாநாட்டில் உரையாற்றிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி நல்ல தலைவர்கள் இணைந்து அமைத்த கூட்டணி என்றார். 
கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் பொது எதிரியாக தாம் விளங்குவதாகக் கூறிய விஜயகாந்த், மு.க.ஸ்டாலினுக்கு எதிரி அவரது எண்ணங்கள்தான் என்றார்.

திருமாவளவன் உரை:

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும்போது எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் இல்லாத சிறப்பு தகுதியாக கூட்டணி ஆட்சியை அறிவிக்கும் தைரியம் விஜயகாந்துக்கு இருப்பதாக தெரிவித்தார்.

ஜி.ராமகிருஷ்ணன் உரை:

மக்களுக்காகவே தாம் தவ வாழ்க்கை வாழ்வதாக தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்தார்.

ஜி.கே.வாசன் உரை:

தமிழகத்தை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆண்டு சிரழித்விட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பிரேமலதா உரை:

தேமுதிகவிலிருந்து நிர்வாகிகள் விலகி வருவதை கடுமையாக விமர்சித்த பேசிய விஜயகாந்த் மனைவி பிரேமலதா, தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டிலிருந்து 

தமது கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டதாக எழுந்துள்ள விமர்சனங்களை மறுத்தார். அதிமுகவிடமிருந்து தாம் பணம் வாங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் பிரேமலதா கடுமையாக மறுத்தார்.
Tags:
Privacy and cookie settings