கசகசா கலந்த கேக் சாப்பிட்டால் சிறை தண்டனை !

மலேசியாவில் கசகசா கலந்த கேக் சாப்பிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
கசகசா கலந்த கேக் சாப்பிட்டால் சிறை தண்டனை !
இது குறித்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் போதைமருந்து தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் வான் அப்துல்லா.

இஷாக் கூறுகையில்,

கசகசா கலந்த கேக் சாப்பிடுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். அதனால் மக்கள் தாங்கள் சாப்பிடும் கேக்கில் கசகசா இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு சாப்பிடவும்.

அப்படி இல்லாமல் கசகசா கேக் சாப்பிட்டு சிக்கினால் போதைப் பொருள் உட்கொண்டதற்காக அவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறையும், அபராதமும் விதிக்கப்படும். 
கசகசா கலந்த கேக்கை சாப்பிடுவர்கள் அதை அதிக அளவில் உட்கொண்டால் போதை ஏற்படும் என்றார். 

இந்தியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கசகசா மலேசியாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings