ஃபேஸ்புக்கில் அமெரிக்க பெண்ணிற்கும் இந்திய இளைஞருக்கும் மலர்ந்த காதல் !

”மொழி, இனம், மதம், நாடு இவைகளை கடந்து வரும் காற்றைப் போல காதலையும் சுவாசிப்போம்” என்று திரைப்படம் ஒன்றில் வசனம் வரும்.
திரைப்படங்களில் மட்டுமே பார்க்காமலே காதல், மின்னஞ்சல் மூலம் காதல், வயது குறைவான இளைஞர் அவரைவிட வயதில் மூத்த பெண்ணை காதலித்து கரம் பிடிப்பது போன்றவை நடந்து கொண்டிருந்தன.

ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் நடைமுறை வாழ்க்கையிலும் இது போன்ற நிகழ்வுகள் சாத்தியமாக ஆரம்பித்துள்ளன.

சமீபத்தில் அமெரிக்காவைச் சார்ந்த எமிலி என்னும் 41 வயது பெண்ணும் அகமதாபாத்தைச் சார்ந்த ஹிதேஷ் சாவ்டா என்னும் 23 வயது இளைஞனும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாகி காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாகி நாளைடைவில் காதலர்களாக மாறினர். ஹிதேஷிற்கு ஆங்கிலம் தெரியாது அதைப்போல எமிலிக்கும் ஹிந்தி தெரியாது. எனவே கூகுள் மூலம் மொழிப்பெயர்ப்பு செய்து அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் வீடியோ கான்பிரஷிங்கின் மூலமும் அவர்கள் காதல் தொடர ஆரம்பித்தது. ஹிதேஷை நேரில் சந்திக்க விரும்பிய எமிலி இந்தியாவிற்கு வந்தார். அவர்கள் இருவரும் சந்தித்த அன்றே திருமணமும் செய்து கொண்டனர்.

எல்லா பெற்றோர்களைப் போல ஹிதேஷின் பெற்றோரும் மகனின் காதல் குறித்து அச்சம் கொண்டிருந்தனர். ஆனால் எமிலியின் உண்மையான அனபை புரிந்து கொண்டு அவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர்.

இவர்களின் காதல் திருமணம் பற்றி எமிலி கூறும்போது ஹிதேஷின் அன்பு உண்மையானது என்றும் அவருடைய எளிமையும் வெகுளித்தனுமே அவரை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.

ஹிதேஷ் எமிலி பற்றி கூறும்போது, எமிலியின் எளிமையும் வெகுளித்தனமுமே அவரை கவர்ந்ததாக கூறினார். மேலும் எமிலிக்கு இந்திய பாரம்பரியமும், கலாச்சாரமும் மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறினார்.

அமெரிக்காவிற்கு தேனிலவு செல்ல திட்டமிட்டிருக்கும் அவர்கள் தேனிலவிற்கு பின் இந்தியாவிலே குடியேற முடிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings