யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?

தப்பத் யதா – அபீலஹபின்… அபூலஹபின் இரு கரமும் நாசமாகுக! என்பதையும் (முனாபிகீங்களின் வரலாறு நிறைந்திருக்கும்) முனாபிகீன் சூராவையும், இன்னும் எவ்வசனங்களில் காபிர்களின் கற்சிலைகளின்
கூற்று வந்துள்ளதோ அவ்வசனங்களையும் ஓதுவது அல்லாஹ்வை திக்ரு நினைப்பதாக ஆகுமா? இல்லையா? இவை அனைத்தும் இறையோனின் திவ்விய வாக்கியமாகும் அல்லவா?

வாக்கியங்களுக்குரிய நற்கூலி ஓதுபவர்களுக்கு கிடையாதா? இறையோனின் திருவாகியங்களை – வசனங்களை ஓதுவது, நினைப்பது இறையோனை நினைப்பது ஆகாதா?

இறையோனின் பேரருளை, அவனது பேரொளியை – முஹம்மது (ஸல்) அவர்களை நினைப்பது இறைவனை நினைப்பது ஆகாதா?.

காலபிர் அவனு – பிர் அவ்னு சொன்னான் என்பது குரானில் இடம் பெற்றுள்ள திருவசனம் ஆனதினால் கால என்று ஓதினால் மூன்று எழுத்து இருப்பதினால் முப்பது தவாபும்,

பிற அவ்ன் என்று ஓதினால் ஐந்து எழுத்து இருப்பதினால் ஐம்பது தவாபும் கிடைக்கும்.

இது பொழுது, முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்றால் முஷரிக்காகி விடுவானா? என்னே! விந்தையான ஆராய்ச்சி? ஹஜ்ரத் யாகூப் (அலை) நிலையிலும்,

இருப்பிலும் எந்த நிலையிலும் எந்த நேரமும் யூசுப் யூசுப் என்று சொல்லி கொண்டே இருந்தார்கள் (தல்லாஹி – தப்தவு – தத்குரு – யூசுப் – யூசுபை நினைத்து கொண்டே யாகூப் இருந்தார்கள்

(அல் குரான் 12:85) என்று இறைவன் கூறியுள்ளான்) யூசுப் (அலை) நபியின் நினைவால் அழுது அழுது கண்கள் கூட வெண்ணிரமாகி விட்டன.

அவ்விதமாக ஹஜ்ரத் ஹவ்வா (அலை) அவர்களது பிரிவால் ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்கள் ஹவ்வா ஹவ்வா என்றும்,

இமாம் ஹுசைன் (ரலி) அவர்களது இழப்பால் இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) அவர்கள் ஹுசைன் ஹுசைன் என்றும் ஜெபித்து கொண்டும் நினைத்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள்.

தந்தையை இழந்து பரிதவிக்கும் என்னிலை யாகூப் (அலை) அவர்களது நிலையை காண குறைந்ததில்லை. அவர்களோ செல்வா மகனை இழந்தார்கள்,

நானோ பெற்ற தந்தையை இழந்திருக்கிறேன் எனும் பாடல் ஜைனுல் ஆபிதீன் அவர்களது சோக காட்சியை பிரதிபலித்து கொண்டு இருக்கிறது.

சொல்லுங்கள்! பார்ப்போம், இவர்கள் எல்லாம் இணைவைத்த, முஸ்ரிகுகளா என்ன? இல்லையெனில்,

ஆஷிக் – அன்பன் தன் (உயிருக்கும் மேலான) நபியை நினைத்தால் முஸ்ரிக்காகி விடுவது ஏன்? வியாபாரி இரவு பகலாக தன் வியாபார நினைவில் கிடப்பான்,

மாணவன் இரவு பகலாக எந்த நேரமும் பாட நினைவில் இருப்பான். இன்னவர்களும் அல்லாஹ் அல்லாதவற்றை அல்லவா நினைத்து கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் முஷ்ரிக்குகள் ஆவதில்லையே?

குறிப்பு:

பஞ்சாப் தேனா நகரில் நமக்கும், மௌலவி தனாவுல்லாஹ் அமிர்தசரீ அவர்களுக்கும் யா ரசூலுல்லாஹ் என அழைப்பது சம்பந்தமாக ஓர் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தனாவுல்லாஹ் சாஹிபு அவர்கள் இதே திரு குரான் (4:102) வசனத்தை முன் வைத்தார்கள்.

மூன்று கேள்விகள் மட்டுமே நாம் அவரிடம் வினவினோம்.

1. திரு குரானில் – அம்ரு – ஏவல் வினை எத்தனை அர்த்தத்திற்கு வருகிறது? இவ்வசனத்தில் என்ன அர்த்தத்திற்கு உபயோகிக்கப் பட்டுள்ளது?

2. ஒரு நகீழ் – எதிரிடை வாஜிபாகுவதால் மாற்று நகீழும் ஹராமாகுமா? அல்லவா?

3. திக்ருல்லாஹ் – அல்லாஹ்வை நினைப்பதற்கு எதிர் பதம் என்ன? திக்ருகைரில்லாஹ்- அல்லாஹ் அல்லாதவற்றை நினைப்பது எதிர்பதமா?

அல்லது அதமு திக்ரில்லாஹ் – அல்லாஹ்வை நினைக்காமல் இருப்பது எதிர்பதமா? எது? அவர் சொன்ன பதில் இதோ!
தாங்கள் கேள்விகளில் உசூலுல் பிக்ஹு – பிக்ஹு மூலாதார விஷயத்தையும், மன்திக் இல்மையும் புகுத்தி விட்டீர்கள்.

இந்த இரண்டு கல்வியுமே பித்அத ஆனவை. அதாவது – இவ்விரண்டு கல்வியை கற்று கொள்ளாது மடையனாக இருப்பது சுன்னத் என்பது அவர் கருத்து.

அதன் பின் அப்படியானால், மீலாது ஷரீப் கொண்டாடுவது ஹராம் என்றும், ஹதீத்கலை வல்லுனர்கள் ஹதீதுகளை (சேகரித்து) எடுப்பது சுன்னது என்றும் வர வேண்டுமே,

அதஹையதொரு விளக்கம் பொதிந்து இருக்கும் படியான சரியான தரீபை (THAREEF) – வரை இலக்கணத்தை பித்அத் என்பதற்கு கூறுங்கள் பார்க்கலாம் என்று அவரிடம் வினா தொடுத்தோம்.

இவ்வினா இன்று வரை அவர் முன் வைக்கப்பட்டே இருக்கிறது. அவரும் மரணித்து விட்டார்.

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிஊன் அவரது அபிமாநிகலாவது அல்லது அவரது கொள்கை வேந்தர்கலாவது பதில் அளித்து பார்க்கலாமே!

கேள்வி:

எங்களுக்கு அதஹிய்யத் தை அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ – என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்று தந்தார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மௌதான பொழுது அஸ்ஸலாமு – அலன்னபியு என்று சொன்னோம் என்ற ஹதீத் புகாரி ஷரீப் இரண்டாம் பாகம்,

கிதாபுல் இஸ்திதான் பாபுல் அகதி பில்யதைன் எனும் பாடத்தில் ஹஜ்ரத் இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னிலைகுரிய – காபை வைத்து அஸ்ஸலாமு அலைக்க என்று பெருமானாரின் ஜீவிய காலத்தில் அவர்கள் (சஹாபாக்கள்) சொன்னார்கள்.

(பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்ததும் முன்னிலையை விட்டு விட்டார்கள்

படர்கையின் வார்த்தையை கொண்டு அஸ்ஸலாமு அளன்னவியி என்று புகாரி ஷரீபின் விரிவுரையான ஐனியில் கூறப்பட்டு உள்ளது.

எனவே பெருமானாரின் (ஸல்) அவர்களின் ஜீவிய காலத்தில் அஸ்ஸலாமு அலைக்க என்று சொல்வது இருந்தது.

அவர்களது வபாதிர்க்கு பிறகு அதஹிய்யாதில் கூட அழைக்க படுவதை விட்டு விட பட்டுள்ளது என்று இந்த ஹதீதின் மூலமும் விரிவுரையின் வாசகங்கள் மூலமும் தெரிய வருகிறது.
யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
சஹாபாக்கள் (ரலி) அதஹிய்யாதில் கூட இவ்வாறு அழைப்பதை அகற்றி விட்டு இருக்கும் பொழுது, எவன் தொழுகைக்கு அப்பால்

யா ரசூலுல்லாஹ் (ஸல்) என்பது போன்றவற்றை கூறுவானாயின் அவன் முற்றிலும் முஷரிக்காகி விடுவானே?

பதில்:

புனித புகாரி ஷரீப், அதன் விரிவுரையான ஐனி எனும் நூற்களின் வாசகங்கள் (வினா தொடுத்த) உங்களுக்கு கூட எதிராக வந்துள்ளது ஏன்? என்று எந்த முஜ்தஹிதான இமாமும் அதஹிய்யாதை மாற்ற உத்திரவிட வில்லையே!

இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்களுடையவும், இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் இப்ன் அப்பாஸ் (ரலி) அவர்களுடையவும் அதஹிய்யாதை தெரிவு செய்து இருக்கிறார்கள்.

அவர்களது இரு அதஹிய்யாதிலும் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு என்று தான் இருக்கிறது.

கைறு முகல்லிது – இமாம்களை பின் தொடராதவர்கள் தனாவி கூட்டதினர்களானாலும் – கஜ்னவி குழுவினர்களானாலும் இதே முன்னிளையுள்ள அதஹிய்யாதை தான் ஓதி வருகின்றனர்.
எனவே, சில சஹாபாக்கள் (ரலி) தங்களது இஜ்திஹாதினால் அதஹிய்யாதை மாற்றியுள்ளார்கள்.

மர்பூஆனா பெருமானனரின் (ஸல்) அவர்களின் பக்கம் சேர்பிக்கப்பட்ட ஹதீதுக்கு எதிராக இந்த இஜ்திஹாதை அமல் படுத்த முடியாது.

மாற்றி அமைத்த இந்த சில சஹாபாக்கள் (ரலி) கூட, மறைவாக இருக்கும் பொழுது முன்னிலையாக அழைப்பது ஹராம் என்ற தோரணையில் மாற்றி விடவில்லை. காரணம்,

பெருமான் நபியின் ஜீவிய காலத்திலும் வெகு தொலைவில் வசித்து வந்த சஹாபாக்கள் கூட, இதே முன்னிலையான அதஹிய்யாதை ஓதி வந்தனர்.

இறுதியாக, எமன், கைபர், மக்கா முகர்ரமா, நஜ்த், இராக் போன்ற எல்லா இடங்களிலும் தொழுகை நடை பெறும் பொழுதும் அதே அதஹிய்யாதை ஓதி வந்துள்ளார்கள்.

அதஹிய்யதில் அழைப்பவர் எங்கோ ஒரு தொலைவில் இருந்து கொண்டு அழைக்கிறார். பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா நன்னகரில் உறைவிடம் கொண்டுள்ளார்கள்.

இப்படி அழைப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவும் இல்லை, இப்படியான தொரு சந்தேகமும் சஹாபாகளுக்கு (ரலி) எழவும் இல்லை.

பெருமானார் (ஸல்) அவர்கள் அதஹிய்யாதை கற்று கொடுக்கும் பொழுது எனது ஜீவிய காலம் மட்டும் ஓத வேண்டிய அத்தஹிய்யாது,

எனது வபாதிர்க்கு பின் ஓத பட வேண்டிய அத்தஹிய்யாது வேறு இருக்கிறது என்றும் சொல்லவில்லை.

இதனால் முன்னிலையான அதஹிய்யாத்தை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை, எனவே, அச்சில சஹாபாக்களை (ரலி) இதில் பின் தொடர வேண்டியது இல்லை.

அப்படி இல்லையாயின் பெருமானார் (ஸல்) அவர்களே எனது வபாதிர்க்கு பின் என்னை முன்னிலை ஆக்காதீர்கள் என்று சொல்லி இருப்பார்கள்.

எனவே இது பொழுது, முன்னிலையானதை வைப்பதுவே மிக எட்ட்ரமானது.அஸல் தலீமில் (THALEEM) இவ்வாறு தான் உள்ளது.

என்று தப்லீக் ஜமாஅத் தலைவர்களில் ஒருவரான ரஷீத் அஹ்மத் கங்கோகி – பதாவா ராஷிதிய்யாவில் முதல் பாகம் 17 ஆம் பக்கத்தில் எழுதி உள்ளார்.

பதிலின் சுருக்கம்:

சஹாபாக்கள் (ரலி) சிலரின் இச்செயல் ஆதாரமாக அமையாது. இல்லையெனில் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்தமான ஜீவிய காலத்திலும் கூட (சஹாபாக்கள் இடையே) ஷிர்க் நடந்து இருக்கிறது.

அதை அவர்கள் தடுக்காது விட்டு வைத்து இருக்கிறார்கள் என்று வந்து விடும். அப்படி மாற்றிய சஹாபாக்கள் (ரலி) சிலர் தான். பலர் அல்லர், என்றாலும்,

இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்களது சொல் அபூ அவானா (ரலி) அவர்களுடைய அறிவிப்பாகும்.

ஆனால் புகாரி நாயகத்தின் (ரஹ்) அறிவிப்பு மிக சரியானது. அதில் அது இப்ன் மஸ்வூத் (ரலி) அவர்களது சொல் அல்ல என்று விபரிக்கப் பட்டுள்ளது.

அது அந்த அறிவிப்பாளரின் உரை ஆகும். அதன் எதார்த்தமானது ஸலாமுன் யனீ அலன் நபிய்யி என்பது தான்.

பெருமானார் (ஸல்) அவர்களது ஜீவிய காலத்தில் எந்த சலாம் இருந்ததோ அதே சலாம் தான் அவர்களது (ஸல்) வபாதிர்க்கு பின்பும் நீடித்து இருந்தது என்ற

கருத்து கொள்ளவும் முடியும் என்ற அறிய தொரு விளக்கத்தை மிர்காத் எனும் நூலில் அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே, அதஹிய்யாத்தை சஹாபாக்கள் (ரலி) ஒரு பொழுதும் மாற்ற வில்லை என்றும், இது அறிவிப்பாளரின் விளக்கத்தில் ஏற்பட்ட விளைவு என்றும்,

அஸல் சம்பவத்தில் இது இல்லை என்றும் தெரிய வருகிறது. எனவே மேற்கண்ட வினாவிற்கு அடிப்படை இல்லாமல் போய் விடுஹிறது.

கேள்வி:

தொலைவில் இருந்து நபியையோ, வலியையோ அலைக்கும் போது, நமது இச்சப்ததை அவர்கள் கேட்கின்றனர் என்று எண்ணம் கொண்டு அழைக்கக் கூடாது.

அதனால் ஷிர்க் வந்து விடும், காரணம் தொலைவிலுள்ள சப்தத்தை கேட்பது இறைவனின் ஸிபாத் – இலட்சணமாகும். அல்லாஹ் அல்லாதவர்க்கு இத்திறன் உண்டு என்று நம்புவது ஷிர்க்காகும்.

இந்த நிர்ணயமின்றி யா ரசூலுல்லாஹ் யா கௌத் போன்றவட்ட்ரை கொண்டு அழைப்பது ஆகுமாகும்.

உதாரனத்திற்க்கு தென்றல் காற்றே கேள்! என்று சொல்லும் போது தென்றல் காற்று நமது இவ்வழைப்பை கேட்கிறது என்ற நினைப்பு வருவதில்லை தானே, அது போன்று தான் என சில வஹ்ஹாபிகள் கூறுகின்றனர்.

இன்றைய போது வஹ்ஹாபிகளும் (ஷைத்தான் தொவ்ஹீத்வாதிகளும், மற்றும் அவர்களது கொள்கையை சேர்ந்தவர்களும்) இதையே காரணமாக காட்டுகின்றனர்.

தப்லீக் தலைவர்களில் ஒருவரான் ரஷீத் அஹ்மத் கங்கோஹியும் தமது பாதாவா ரஷீய்யவிலும் இதர நூற்களிலும் இதற்கு ஊக்கம் அளித்து இருக்கின்றனர்.
பதில்:

தொலைவில் உள்ள சப்தத்தை கேட்பது அல்லாஹ்வின் ஸிபத்- இலட்சணம் என்பது அறவே இல்லை,

தொலைவில் இருந்து அழைப்பவனுக்கு தூரமாக தெரிந்தாலும் அல்லாஹ்வுக்கு தொலை தூரம் என்பது இல்லை.

உயிர் நரம்பை விட சமீபமாக இருக்கிறான். நஹ்னு அக்ரபு – இலைஹீ- மின் ஹப்லில் வரீதி- நாம் அவனளவில் அவனுடைய பிராண நரம்பை விடவும் அதிகமாக நெருங்கி இருக்கிறோம் என்றும்,

வ இதா ஸ அலக இபாதி அன்னி – என்னை குறித்து என்னுடைய அடியான் (நபியே) உம்மை கேட்பார்களானால் நான் சமீபமாக இருக்கிறேன் (என்று நீர் சொல்லும்) என்றும்,

வ நஹ்னு அக்ரபு இலைஹீ ……………. (மரண தருவாயில் இருக்கிற) அவரிடம் நாம் உங்களை காண அதிக முடுகுதலாக இருக்கிறோம்,

ஆனால் நீங்கள் அதை பார்ப்பதில்லை என்றும் இறைவனே சொல்லுஹிறான்.

எனவே, அவனே சமீபமாக இருப்பதினால் எல்லா சப்தங்களும் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றன. அவன் சமீபமாகவே கேட்கிறான்.

வாதத்துக்காக, தொலைவிலுள்ள சப்தத்தை கேட்பது இறைவனது இலட்சணம் என்று ஒப்புக் கொண்ட போதிலும் சமீபத்திலுள்ள சப்தத்தை கேட்பதும் அவனது இலட்சணம் தானே!

ஆகவே, அருகாமையில் உள்ளவர்களையும், இந்த நமது அழைப்பை- சப்தத்தை கேட்கின்றனர் என்று விளங்கி, அழைக்காதீர்கள்.

ஷிர்க்கு வந்து விடும் என்று சொல்லி (தொலைவில் உள்ளவர்கள், அருகாமையில் உள்ளவர்கள்) எல்லோருக்கும் (எதையும்) கேட்க வைக்காதீர்கள்.

எவ்விதம் தொலைவில் உள்ள சப்தத்தை கேட்பது இறைவனின் இலட்சனமோ (உங்கள் சொல்படி) இருக்கின்றதோ அவ்விதமே

தொலைவி லுள்ளவற்றை பார்ப்பதும் தொலைவிலுள்ள மனத்தை நுகர்வதும் இறைவனின் இலட்சணங்கள் தானே.

இறை நேசச் செல்வர்களான அவ்லியாக்களுக்கு தொலை தூரம், சமீபம் இரண்டுமே ஒன்று தான் என்று இல்முல் கைபு, ஹாளிர், நாளிற் பற்றி பேசும் போது ஊர்ஜிதப் படுத்தி இருக்கும் போது,

தொலைவு சமீபத்தில் உள்ளவற்றை எப்படி ஒரே விதமாக பார்த்து கொண்டு இருக்கிறார்களோ அவ்விதமே தொலைவு,

சமீபத்திலுள்ள சப்தத்தை – அழைப்பை அவர்கள் காதுகள் கேட்கின்றன என்றால் எங்கனம் ஷிர்க் ஆகும்?

இத்தன்மைகள் அவர்களுக்கு அல்லாஹ்வினால் அருளப் பட்டவைகள் (அல்லாஹ்வுக்கு இவைகள் சுயமாக உள்ளவை,

கொடுக்கப் பட்டவையும் (அதாயீஉம் ) சுயமாக உள்ளவை. (தாதியும்) எங்கனம் ஒன்று போல் ஆகும்? ஒன்றானால் அல்லவா ஷிர்க் ஆகும்?.

தொலைவான சப்தங்களை நபிமார்கள், வலிமார்கள் கேட்கின்றனர் என்பது பற்றி இதோ (சிலவற்றை) எடுத்து கட்டுகிறோம்! பாரீர்!

ஹஜ்ரத் யாகூப் (அலை) அவர்கள் கண் ஆன் என்னும் ஊரில் இருந்து கொண்டு (மிக தொலைவில் உள்ள மிஸ்ரு நாட்டில் இருந்து கொண்டு வரப்படும்) யூசுப் (அலை) அவர்களது சட்டையின் மணத்தை நுகர்ந்தார்கள்.
யூசுபின் மணத்தை நான் நிச்சயம் பெறுகிறேன் (அல் குரான் 12:94) என்றும், யாகூப் (அலை) சொன்னார்கள். சொல்லுங்கள் இதுவும் ஷிர்க்கா?

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் மதீனா நன்னகரிளிருந்து கொண்டே நிஹாவந்து என்னும் இடத்தில் போர் செய்து கொண்டு இருந்த

படை தளபதி சாரியா (ரலி) அவர்களுக்கு (யா சாரியா அல் ஜபல் என) எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் (நூல் மிஷ்காத் 546)

உமர் (ரலி) அவர்களது கண் தொலைவில் உள்ள காட்சியை கண்டது என்றும், சாரியா (ரலி) அவர்களது காது தொலைவிலுள்ள சப்தத்தை கேட்டது என்றும் இந்த நிகழ்ச்சி உறுதி செய்கிறது.

ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறை இல்லமாம் கபதுல்லாஹ்வை கட்டியதும் (அபூகுபைஸ்) மலையின் மீது ஏறி,

எல்லா ஆன்மாக்களையும் முன்னோக்கி, அல்லாஹ்வின் அடியார்களே! (அல்லாஹ் ஹஜ்ஜை கடமை ஆக்கி உள்ளான், ஹஜ் செய்யுங்கள்) என்று கூவி அழைத்தார்கள்.

கியாமத் நாள் வரையிலும் படைக்கப் படுகின்றவர்கள் அனைவரும் அவ்வழைப்பை கேட்டனர். எவர்கள் லெப்பைக் என்று சொல்லி பதில் அளித்தார்களோ அவர்கள் நிச்சயமாக ஹஜ் செய்தே தீருவார்கள்.

எவர்கள் மெளனமாக இருந்தார்களோ அவர்களுக்கு ஹஜ் செய்ய ஒரு போதும் முடியாது போய் விடும்.. என்று தப்சீகளில் 22:27 வசனத்தின் கீழ் விவரிக்கப்பட்டு உள்ளது.

தொலைவில் இருந்து கேட்டனர் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், படைக்க படுவதர்க்கு முன்னரே அனைவரும் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களது அழைப்பை கேட்டுள்ளனரே!

அப்படியானால் இதுவும் ஷிர்க்கா? சொல்லுங்கள்!

இவ்வாறே இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் சமூகத்தில், இரட்சகனே! மரணித்தவர்களை எப்படி நீ உயிர் ஆக்குவாய் ? என்பதை எனக்கு காட்டுவாயாக! என வினவினார்கள்.

அது பொழுது நான்கு பறவைகளை அறுத்து அவைகளின் கறியை நான்கு மலைகளின் மீது வைத்து தும்மத் ஊஹுன்ன யதீனக ஸயன் – பின் அவைகளை அலையும்,

அவைகள் (உயிர் பெற்று) விரைந்து உம்மிடம் வரும் என்று கட்டளை இட்டான். (அவ்வாறே அறுத்தார்கள், பின் அழைத்தார்கள்).

அறுக்கப்பட்ட – உயிரற்ற பறவைகள் அழைக்கப் படுஹின்றன, அப்போது அவைகளும் ஓடி வருகின்றன, என்று இருக்கும் போது, அவ்லியாக்கள் இந்த பறவைகளை விடவும் அற்பமானவர்களா என்ன?
யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
இன்று கூட நடை முறையில் ஒருவன் இந்தியாவில் இருந்து கொண்டு தொலை பேசி மூலமாக லண்டனில் உள்ளவனோடு உரை ஆடுஹிறான்,

நமது இப்பேச்சை லண்டனில் உள்ளவன் தொலை பேசி மூலம் கேட்கிறான் என்று விளங்கி தான் – அறிந்து தான் அழைக்கிறான்.

இவ்வழைப்பு ஷிர்க் இல்லை என்று இருக்கும் போது, ஒரு முஸ்லிம் தொலை பேசியின் திறனை விட நுபுவத்தின் திறன் பன்மடங்கு வலுவானதினால்

நபிமார்கள் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்ட இந்த வல்லமையால் எல்லா அழைப்பின் சப்தத்தையும் கேட்கின்றனர் என்று

நிர்ணயம் கொண்டு யா ரசூலுல்லாஹ் – அல் யாத் – இறை தூதரே இரட்சிப்பு என்று அழைத்தால் எங்கனம் ஷிர்க் ஆகும்?

ஒரு நாள் இரவு வேளையில் வீட்டில் மைமூனா (ரலி) அவர்களுடன் ரசூல் (ஸல்) அவர்கள் இருக்கும் போது உதவி உதவி என்று அபயக் குரல் கேட்டு,

நான் இங்கு இருக்கிறேன், நான் இங்கு இருக்கிறேன், நான் இங்கு இருக்கிறேன் என்றும், உங்களுக்கு உதவி கிடைத்து விட்டது என்றும்

மூன்று தடவை ரசூல் (ஸல்) அவர்கள் வீட்டில் இருந்தவாறு சொல்ல, மைமூனா (ரலி) அவர்கள், இங்கு யாரும் இல்லாமல் இருக்கும் போது, நீங்கள் யாருடன் பேசிக் கொண்டு இருந்தீர்கள் யா ரசூலுல்லாஹ் (ஸல்).

அதற்க்கு ரசூல் (ஸல்) அவர்கள் நான் பனி கஅப் கோத்திரத்தை சார்ந்த ராஜிஜ் என்ற மனிதருடன் பேசி கொண்டு இருந்தேன்.

அவர் என்னிடம் குரைஷ்களுக்கு எதிராக என்னிடம் உதவி நாடினார். மைமூனா (ரலி) அவர்கள் சுபுஹு தொழுகையை அடுத்த நாள் காலையில் முடித்தவுடன்,

மைமூனா (ரலி) அவர்கள் ராஜிஜ் அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களை அழைத்து உதவி தேடியதை யா ரசூலுல்லாஹ் (ஸல்) உதவி செய்யுங்கள்

அல்லாஹ்வின் அடியார்களை எங்களுக்கு உதவி செய்ய கூப்பிடுங்கள் என்று அழைத்ததை கேட்டான் என்று கூறினார்கள் ( ஆதாரம் முக்தசர் சிராத்துல் ரசூல் – பாடம் மக்காஹ்வின் வெற்றி)

ஹஜ்ரத் சுலைமான் நபி (அலை) அவர்கள் ஒரு காட்டின் பிரயாணம் செய்து கொண்டு இருக்கும் போது

சிற்றெறும்பின் சப்தத்தை தொலைவில் இருந்து கொண்டே கேட்டுள்ளார்கள் அந்த (தலைமை) சிற்றெறும்பு சொல்லுகிறது.

யா அய்யுகள் நாமளு…… எறும்புகளே! உங்களது குடி இருப்புக்குள் நுழைந்து கொள்ளுங்கள், சுலைமானும் அவரது படையினரும் அவர்கள் அறியா வண்ணம் உங்களை மிதித்து விட வேண்டாம் (அல் குரான் 27:18)

சிற்றெறும்பின் இக்கூற்றை மூன்று மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு சுலைமான் நபி (அலை) கேட்டார்கள் என்று இவ்வசனத்தின் கீழ் தப்சீர் ரூஹுள் பயானில்,

மற்றும் இதர தப்சீர்களிலும் எழுதப் பட்டுள்ளது. சின்னஞ் சிறு எறும்பின் உரையாடல் சப்தத்தை மூன்று மைல்களுக்கு அப்பால் கேட்க முடிகிறது. இதனை ஷிர்க் என்று சொல்லுவார்களா?

மரணித்தவர்களை அடக்கம் செய்த பின் வெளி ஜனங்களின் காலோசையை மரணித்தவர்கள் கேட்கின்றனர், ஜியாரத் செய்பவர்களை பார்கின்றனர், அவர்கள் இனம் தெரிந்து கொள்கின்றனர்.

இதனால் மண்ணறைகளுக்கு சென்று மரணித்தவர்களுக்கு சலாம் சொல்லுவது வேண்டர்பாளது என்று மிஷ்காத் எனும் நூலில் கப்ரின் வேதனையை தரிபடுதுதல் எனும் பாடத்தில் கூறப்பட்டு உள்ளது.

மண்ணறைக்குள் இருந்து கொண்டு இவ்வளவு மெல்லிய (நடப்பவர்களது கால்) ஒலியை கேட்பதானது எவ்வளவு தூரத்தில் இருந்து கேட்பதாகும். சொல்லுங்கள் இதுவும் ஷிர்க்கா?

இறை நேச செல்வர்கள் இறையோனின் வல்லமையால் பார்கின்றனர், கேட்கின்றனர், நுகர்கின்றனர், இவ்வளமைகளை அல்லாஹ் அவர்களுக்கு நல்கியிருக்கின்றான் என்று மிஷ்காத் – கிதாபு தவத் என்பதில் இருந்து

ஒரு ஹதீதை மேற்கோள் காட்டி நாம் இறை அன்பர்களுக்கு மறைவானவற்றை பற்றிய அறிவு இருக்கிறது

என்பது பற்றி பேசும் போது வரைந்து இருக்கிறோம். அது போது அவர்கள் தொலைவில் இருந்து கொண்டு கேட்பது ஷிர்காகுமா?

எப்பென்னாவது தன் கணவனுடன் சண்டை இட்டு கொண்டால், சொர்க்கத்தில் இருந்து கொண்டு

ஹூருல் ஈன எனும் சுந்தரிகள் அப்பெண்ணை சபிக்கின்றார்கள் என்று திவ்விய ஹதீதில் வந்து இருக்கின்றது.

வீட்டின் அடிக்குள் நடக்கும் சண்டையை கூட இவ்வளவு தொலைவில் இருந்து கொண்டு ஹூருல் ஈன்கள் பார்கின்றனர், கேட்கின்றனர்.

மனிதன் முடிவு நல்ல முடிவாகுமா? (அல்லவா) என்பது பற்றிய மறைவான சங்கதிகளையும் அறிகின்றனர். ரேடியோ, டெலிவிஷன் மூலம் தொலைவில் உள்ள வற்றை கேட்கின்றனர், பார்கின்றனர் என்று இருக்கும் போது?

நூருன்னுபுவத் – வல்விலாயத் – நபித்துவ, வலித்துவ அருள் ஜோதி இந்த மின் இயக்க சக்தியை விடவும் குறைவானதா என்ன?

பெருமானார் (ஸல்) அவர்கள் மிராஜ் – விண்ணுலக பயணத்தின் போது, சொர்க்கத்தில் ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களின் காலடி ஓசையை கேட்டார்கள்.

அது பொழுது ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் விண்ணுலக பயணத்தை மேற் கொண்டு இருக்கவில்லை. மண்ணுலக வீட்டில் இருந்தார்கள்.

தஹஜ்ஜுத் தொழுகைக்காக அங்கும் இங்கும் சுற்றி கொண்டு இருந்திருப்பார்கள்.
இங்கு இருக்கும் பிலால் (ரலி) அவர்களின் காலடி ஓசை அங்கு சொர்க்கத்தில் கேட்கின்றது. ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் சூக்கும உடல் எடுத்து அங்கு சென்று இருந்தார்கள் என்றால்,

(நாம் கூறி வருகின்ற) ஹாளிர், நாளிற் என்பது ஊர்ஜிதமாகி விட்டது. இவைகள் அனைத்தையும் நம் பிரதிவாதிகள் அல்லாஹ் கேட்க வைத்தான், அவர்கள் கேட்டுக் கொண்டார்கள் என்று சொல்லுவார்கள்.

ஆம்! நாமும் இதையே தான் சொல்லுகின்றோம். நபிமார்கள், வலிமார்களுக்கு தொலைவிலுள்ள சப்தங்களை அல்லாஹ் கேட்க வைக்கும் போது இவர்கள் கேட்கின்றனர்.

இறைவனுக்கு இத்தன்மை தாதி – சுயமானது. அவர்களுக்கு அதாயி -அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டது. இறைவனுக்கு அது கதீம்-பூர்விகமானது, இவர்களுக்கோ இது ஹாதிது – புதிதானது.

இறைவனுடைய இத்தன்மை எவருடைய கரதுக்குள்ளும் அடங்கியதில்லை! ஆனால் இவர்களுக்கான் இத் தன்மையோ அல்லாஹ்வின் கைப்பிடியினுள் அடங்கியது.

காது மற்ற உருப்புகளின்றி அல்லாஹ் கேட்கிறான், இவர்கள் காதினால் கேட்கின்றனர். இந்த அளவுக்கு பாகுபாடு இருக்கும் போது – ஷிர்க் – இணை வைத்தல் எப்படி ஏற்படும்?

யா ரசூலுல்லாஹ்? என அழைப்பது பற்றி இன்னும் அதிகம் சொல்லலாம், எனினும் இதோடு முடித்துக் கொள்கிறோம். நம் முடிவையும் நல் முடிவாக அமைய அல்லாஹ் தஆலா அருள் புரிவானாக!

இறைவா! உண்மையை உண்மையாக எங்களுக்கு காட்டி, அதை பின் பற்றி நடப்பதற்கும், அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி,

அதை தவிர்த்து நடப்பதற்கும் அருள் புரிவாயாக ! ஆமீன். அற்ஹமர் ராஹிமீனே! யா ரப்பல் ஆலமீனே!

குறிப்பு:

மேற்கூறப்பட்ட யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா எனது உச்தாதும் , ஷைகும் எழுதியது. காப்பி எடுத்து எழுதி இருக்கிறோம்.
Tags:
Privacy and cookie settings