சென்னையில் திடீர் மின்தடை !

1 minute read
வட சென்னை தண்டையார்பேட்டை துணை மின்நிலைய இணைப்பில் ஏற்பட்ட திடீர் பழுதால் பல இடங்களில் ஒருமணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் மாலையில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
வட சென்னை தண்டையார்பேட்டை துணை மின்நிலையத்தில் இருந்து தண்டையார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, வியாசர்பாடி, ஏழுகிணறு, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த துணை மின்நிலையத்தின் மின்வழித்தட இணைப்பில் அதிக மின்னழுத்தம் காரணமாக நேற்று மாலை திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் கொண்டு வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மின்தடை ஏற்பட்டதால் சென்னையின் பல இடங்கள் இருளில் மூழ்கியது.

இதனால் பொதுமக்களும் குடியிருப்புகளில் இருக்க முடியாமல் வெக்கையால் அவதிப்பட்டனர். மாற்றுவழியில் மின் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், துணை மின் நிலையத்தில் பழுதான இணைப்புகளில் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கடற்கரை, காமராஜர் சாலை, தீவுத்திடல் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக சிக்னல்கள் சரி வர இயங்கவில்லை இதனையடுத்து வாகன ஒட்டிகள் சிரமத்திற்குள்ளாயினர்.
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings