அதிமுக வேட்பாளர் மீது நில மோசடி புகார் !

மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது நில மோசடி புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 
பூண்டியில் உள்ள தனக்குச் சொந்தமான 2.44 ஏக்கர் நிலத்தை, சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாணிக்கம், முறைகேடாக அபகரித்து, விற்பனை செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். 

இதுபற்றி கடந்த ஆண்டில் மதுரை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. எனினும், சரியாக விசாரணை நடத்தாமல், அரைகுறை விசாரணை அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதன்பேரில், வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் மறுவிசாரணை செய்து, அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார். 

இதன்பேரில் விசாரணை நடத்தும்படி, மதுரை குற்றப்பிரிவு போலீசாருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings