ஜனவரி 19, அதிகாலை யிலேயே குமார், சரவணன், வேல்முருகன் இவர்களுடன் விஜயகுமாரும் வேலைக்குக் கிளம்பினார்.
வேலை என்றால் நாம் எல்லோரும் பார்ப்பதைப் போன்ற சராசரி வேலை அல்ல...
ஓர் உணவகத்தின் செப்டிக் டேங்கில் அடைப்பு. அதைச் சுத்தப் படுத்த, உடம்பில் கயிறு கட்டிக் கொண்டு உள்ளே இறங்க வேண்டும்.
எந்தவிதப் பாதுகாப்பு கருவிகளும் கிடையாது. ஒருநாள் வேலை, ஆளுக்கு 600 ரூபாய் சம்பளம்.
வீட்டில் மனைவி யிடமும் பிள்ளைகளி டமும் சொல்லி விட்டுக் கிளம்பினார் விஜயகுமார்.
ஊர் எங்கும் கிளை பரப்பியிருக்கும் மிகப் பெரிய பிரியாணிக் கடை அது.
அந்த செப்டிக் டேங்க் 15 அடி நீளமும் 10 அடி ஆழமும் கொண்டது.
ஒரு வழிப் பாதை தான். உள்ளே இறங்கினால், அதே வழியில் தான் வெளியேற முடியும்.
முதலில் உள்ளே இருந்த கழிவுநீரை ஒரு லாரியில் நிரப்பினர். அதுவே 10 ஆயிரம் லிட்டர் இருக்கும்.
பிறகு விஜயகுமார் ஒரு கயிற்றைக் கட்டி இறங்க, உள்ளே கும்மிருட்டு. ஒரு கையால் கயிற்றைப் பிடித்துக் கொண்டு,
காலால் செப்டிக் டேங்கின் சுவரைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் விஜயகுமார்.
அதே சமயத்தில் சரவணன், குமார், வேல்முருகன் மூவரும் கயிற்றைக் கட்டிக் கொண்டு உள்ளே இறங்கினார்கள்.
அவர்களும் ஒரு கையால் கயிற்றைப் பிடித்துக் கொண்டு காலால் சாக்கடை நீரைக் கிளறியும் வாரியும் சுத்தம் செய்யத் தொடங்கினர்.
கிளறக் கிளற சகிக்க முடியாத பெரும் துர்நாற்றம் வீசியது. எத்தனையோ சாக்கடை களைச் சுத்தம் செய்தவர்கள் தான்.
ஆனால், அது மிக மோசமான துர்நாற்றம். விஜய குமாருக்கு மயக்கம் வருகிறது.
வெளியே வந்துவிடத் துடித்து கைகளை மேலே நீட்ட, காப்பாற்றத் தான் ஆள் இல்லை.
உள்ளே அந்த விஷவாயு வேல் முருகனைத் தாக்க அவர் அப்படியே விழுகிறார்.
அவரைக் காப்பாற்று வதற்காக கயிற்றை விட்டு விட்டு குமாரும் வேல் முருகனும் சாக்கடை நீரின் தரையில் குதிக்க... அவர்களும் மயங்கிச் சரிகின்றனர்.
தன் சகாக்கள் மூவர் மயங்கிச் சரிவதை, அரை மயக்க நிலையில் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் விஜயகுமார் பார்க்கிறார்.

தாக்கியது விஷவாயு என்பதை யூகிக்க, அவருக்கு அதிக நேரம் ஆக வில்லை.
பெருங்குரல் எடுத்து உதவிக் காகக் கதறுகிறார். சத்தம் கேட்டு ஹோட்டலில் வேலை பார்க்கும் சிலர் ஓடிவர...
ஹோட்டலின் டெலிவரி பாய் ராஜேஷ், உள்ளே இருப்பவர் களை மீட்கும் முயற்சியில் அவரும் உள்ளே விழுந்து விடுகிறார்.
பிறகு மற்றவர்கள் ஓடிவர... அந்த வாழ்வா, சாவா போராட்டத்தில் உயிருடன் மீட்கப் பட்டது விஜயகுமார் மட்டுமே.
செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வந்த நான்கு பேரில் மூன்று பேர் அந்தச் சாக்கடைக் கழிவு நீருக்குள்ளேயே மூச்சுத் திணறிச் செத்துப் போனார்கள்.
காப்பாற்ற வந்த ராஜேஷும் உயிர் இழந்தார்.
இந்தக் கொடும் துன்ப நிகழ்வின் எஞ்சி யிருக்கும் சாட்சி விஜயகுமார் மட்டும் தான்.
விஷ வாயு தாக்குதலில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட விஜயகுமார், எழுந்து நடமாடக் கூட முடியாமல் உடல் நிலை மோசமாகி, முடங்கிக் கிடக்கிறார்.
முன்னர் நடந்த ஒரு விபத்தில், தன் நான்கு விரல் களையும் இழந்த மாற்றுத் திறனாளி இவர்.
தனியார் ஹோட்டல் விபத்து அவரது ஒட்டு மொத்த வாழ்க்கை யையும் தலை கீழாகப் புரட்டிப் போட்டு விட்டது.
சென்னை, கண்ணகி நகர் குடியிருப்பில் வசித்து வரும் விஜயகுமாரைச் சந்தித்தால், பேசும் போதே குரல் உடைந்து அழுகிறார்.
`இனி என்னங்க இருக்கு. எல்லாம் போச்சு. தெருவுல நடக்கும் போது கூட ஒரு காலை இழுத்துக் கிட்டே தான் நடக்க வேண்டியிருக்கு.
மூணு வேளை சோத்துக்கே கஷ்டப் படுறோம். எனக்கு அண்ணன், தம்பி இருக்காங்க. அவங்க யாரும் உதவி பண்ற நிலையில் இல்லை.
என் பொண்டாட்டி, வீட்டு வேலைக்குப் போயிட்டிருந்தா. இப்ப என்னால நடக்கக் கூட முடியலை ன்னதும் என்கூடவே இருக்கா.
இன்னும் மூணு மாசத்துக்கு வேலைக்குப் போகக் கூடாதுனு டாக்டர் சொல்லிட்டார்.
அது வரைக்கும் எப்படி சோறு சாப்பிடுறது?'' - கேட்கும் போதே குரல் கசிகிறது.
``முன்னால அடையாறுல குடியிருந்தோம். அங்கே ஒரு மரக் கடையில வேலை பார்த்துட்டு இருக்கும் போது மரம் அறுக்குற மிஷின்ல கை சிக்கி, நாலு விரல்களும் போச்சு.
அப்பதான் நான் அம்முவை லவ் பண்ண ஆரம்பிச்சு ஆறு மாசங்கள் ஆகியிருந்தது. கல்யாணம் பேசி முடிச்சிருந்தோம்.

`என்ன நடந்தாலும் இவர் கூடத்தான் இருப்பேன்'னு உறுதியா இருந்தா. கல்யாணமும் பண்ணிக் கிட்டோம்.
விரல் துண்டான பிறகும் அதே கடையில ஆறு மாசங்கள் சின்னச் சின்ன வேலைகள் செஞ்சேன்.
அந்த நேரத்துல எங்களை கண்ணகி நகருக்கு விரட்டி யடிச்சாங்க. அங்க எந்த வேலையும் கிடைக்கலை.
ஏதாவது வேலை செஞ்சு பொழைச்சே ஆக வேண்டிய கட்டாயம்.
இந்தக் கையை வெச்சிக்கிட்டு யார் வேலை கொடுப்பா? அப்பத் தான் கழிவுநீர் க்ளீன்
பண்ணப்போற மெட்ரோ லாரி வண்டியில கிளீனர் வேலை இருக்குனு சொன்னாங்க.
தினமும் போக ஆரம்பிச்சேன். சாக்கடைக் குள்ள இறங்கிச் சுத்தம் பண்றதையும் அங்க தான் கத்துக்கிட்டேன்.
காலையில நாலு மணிக்கே அந்த ஆபீஸ் போயிடணும். அப்பத் தான் அங்கிருந்து கிளம்புற லாரியில ஏற முடியும்.
அதுக்குப் பெரிய சண்டையே நடக்கும். ஒரு நாளுக்கு 300 ரூபாய் கிடைக்கும்.
வேலை இல்லாத நேரத்துல தனியார் ஆஸ்பிட்டல், வீடு, ஹோட்டல்னு செப்டிக் டேங்க் கிளீன் பண்ற வேலைக்குக் கூப்பிடுவாங்க.
அப்படிப்போனா ஒரு நாளுக்கு 600 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். இங்க பக்கத்துல குமார்,
அவர் அண்ணன் சரவணன், அவங்க சொந்தக்காரர் முருகன் எல்லாரும் செப்டிக் டேங்க் கிளீன் பண்ற வேலைதான் செய்
யுறாங்க. நிறைய வேலைகள் வரும் போது என்னையும் கூட்டிட்டுப் போவாங்க.
அப்படித் தான் அன்னைக்கும் போனேன் ''பேச முடியாமல் திணறுகிறார்.
`இந்த அஞ்சு வருஷத்துல பல வீடுகள்ல செப்டிக் டேங்க் சுத்தம் பண்ணி யிருக்கேன்.

தெருவுல இருக்கிற மேன் ஹோல்ல தன்னந்தனி ஆளா இறங்கிச் சுத்தம் பண்ணி யிருக்கேன்.
ஒவ்வொரு தடவையும் உயிரைக் கையில் பிடிச்சிக் கிட்டுத் தான் இறங்குவோம்.
கெட்ட நாத்தம் குடலைப் புரட்டும். பாண்ட்ஸ் பவுடரை கர்சீஃப்ல கொட்டி, மூக்கோடு சேர்த்துக் கட்டிக்குவோம்.
இந்த ஒத்தக் கையை வெச்சுக் கிட்டுத்தான் எல்லா வேலை களையும் பார்ப்பேன்.
அப்பல்லாம் எந்தப் பிரச்னையும் வந்தது இல்லை. இந்த ஹோட்டல்ல எல்லாமே ரொம்ப மோசமா இருந்தது.
அங்கே இருக்கிற டாய் லெட்டுக்குள்ள தான் ஆடு, கோழியை அறுக்கறாங்க.
அதோட ரத்தம், கழிவு, மிச்சம் மீதி எல்லாம் அந்த டாய்லெட் ஓட்டை யிலேயே போற மாதிரி வெச்சிருக்காங்க.
பொதுவா, செப்டிக் டேங்க்ல இருக்கிற கேஸ் எல்லாம், ஒரு கட்டத்துல முட்டை ஷேப்ல உள்ளேயே தேங்கிக் கிடக்கும்.
உள்ள கால் வெச்சுக் கிளறும் போது டொப் டொப்னு வெடிக்கும். அதுல இருந்து கெட்ட கேஸ் வெளிவரும்.
அது ரொம்ப ஆபத்தானது. பாண்ட்ஸ் பவுடர் துணிதான் அப்போ இருக்கிற ஒரே ஒரு சேஃப்டி.
ஆனா, இந்த ஹோட்டல் செப்டிக் டேங்க்ல இருந்த கேஸில் இருந்து, சொல்ல முடியாத அளவுக்குத் துர்நாத்தம் வந்தது.
அத்தனையும் ஆடு, கோழியோட மிச்ச மீதி இறைச்சி, மீந்து போன கெட்டுப் போன பிரியாணி வேற. இப்ப நினைச்சாலும் தாங்க முடியலை.
1993-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் இறந்து போன துப்புரவு தொழிலாளர்கள் - 153 பேர்.
இவர்களில் இழப்பீடு கிடைக்கப் பெற்றவர்கள் - 27 பேர்.
பாதாளச் சாக்கடைகளில் விழுந்து இறந்து போகும் துப்புரவுப் பணியாளர் களுக்கு அரசு தர வேண்டிய இழப்பீடு - 10 லட்சம் ரூபாய்.
மனிதர்களே மலம் அள்ளுவது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆண்டு - 1993.
மனிதர்களே மலம் அள்ளுவது மாநில அரசால் தடை செய்யப்பட்ட ஆண்டு - 2015, மார்ச் 15.
தமிழகப் பாதாளச் சாக்கடை களில் விழுந்து இறந்து போகும் தொழிலாளர் களில் சென்னையில் மட்டுமே இறப்பவர்கள் - 40 சதவிகிதம்.
இந்தியாவில் உள்ள மலம் அள்ளும் தொழிலாளர் களின் எண்ணிக்கை - 1,82,505 பேர்
கடந்த 30 மாதங்களில் தமிழ் நாட்டில் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி விஷவாயு தாக்கி இறந்து போனவர்களின் எண்ணிக்கை - 30 பேர்.

தமிழ்நாடு அரசு கணக்கின்படி மாநிலத்தில் உள்ள மலம் அள்ளும் தொழிலாள ர்களின் எண்ணிக்கை - 979 பேர்.
(இது, இந்திய அளவில் இரண்டாவது இடம்).
நான் ஆஸ்பத்திரியில இருந்த பத்து நாட்கள்ல ஒரு நாள் கூட ஹோட்டல் காரங்க யாரும் வந்து எட்டிப் பார்க்கலை;
எந்த உதவியும் செய்யலை. செப்டிக் டேங்க் உள்ளே விழுந்ததால என்னால எழுந்து நடமாடக்கூட முடியலை.
உதவினு யார்கிட்டயும் போய் நிக்க முடியலை. நிறையக் கழிவுத் தண்ணி வாய்க்குள் போய், நுரையீரல்ல ஓட்டை விழுந்துருச்சு.
எதுக்கு உயிர் வாழணும்னு விரக்தியா இருக்கு. ரெண்டு குழந்தைங்க முகங்களைப் பார்த்துட்டு உயிரோடு இருக்கேன்.
அவங்க எதிர்காலம் தான் ரொம்பப் பயமுறுத்துது'' என்றவர் பேசப் பேச அப்படியே உறைந்து போகிறார்.
அவரைத் தேற்றுகிறார் அவரது மனைவி அம்மு.
`ரெண்டு பேர் சம்பாரிச்சாத் தான் வீட்டு செலவைச் சமாளிக்க முடியும்னு,
அடையாறுல வீட்டு வேலைக்குப் போனேன். ஏதோ கிடைக்கும். இப்ப பத்து நாளா இவரால எழுந்து நடக்கக்கூட முடியலை.
இவரை இப்படியே போட்டுட்டு வேலைக்குப் போக மனசு வரலை. பக்கத்து வீடுகள்ல ரேஷன் அரிசி வாங்குறவங்க எங்களுக்குக் கொடுத்து உதவி பண்றாங்க.

அது ஒண்ணு தான் இப்போதைக்கு... இவரோட மருந்து செலவுக்குக் கூட பணம் இல்லை.
இறந்து போனவங்க குடும்பத்துக்கு பத்து லட்சம் வரைக்கும் பணம் கொடுத்தாங்க. எங்க குடும்பத்தை எட்டிக் கூடப் பார்க்கலை.
செத்துப் போனாத் தான் பணம் தருவாங்களா? இப்படி உயிரோடவெச்சு சாகடிச் சுட்டாங்களே,
நாங்க எங்கே போய் நிக்கிறது?'' என விம்மி அழுகிறார் அம்மு!