அணுகுண்டுக்கு அசையாத ஸெல்ஜாவா பாதாள விமானப் படை தளம் !

உலகின் மிக அதிக பொருட்செலவில் உருவாக் கப்பட்ட ராணுவ கட்டமைப் புகளில் ஒன்று தான்


ஸெல்ஜாவா விமான படை தளம். பிற விமானப்படை தளங்களை போன்று திறந்த வெளியில் இல்லாமல்,

முழுவதும் மலையை குடைந்து, பாதாள விமானப் படை தளமாக இது உருவாக்கப் பட்டது.

தற்போது உருக்குலைந்து கிடக்கும் இந்த விமானப் படை தளத்தின் சிறப்புகள்

நவீன கால ராணுவ கட்டமைப்பு களை தாண்டி வியக்க வைப்பதாக அமைந்து இருக்கிறது. 

இந்த விமானப் படை தளம் பற்றிய சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் ஜெர்மானிய படைகளால் தாக்குதல் களால் நிலை குலைந்து போன நாடுகளில் ஒன்று யுகோஸ்லேவியா. 
இந்தநிலையில், இரண்டாம் உலகப்போர் முடிந்து ஹிட்லர் மறைந்த செய்தி கிடைத்த வுடன், யுகோஸ்லேவி யாவில் புதிய அரசு உருவானது.

யுகோஸ்லேவியா நாட்டில் அமைந்த புதிய அரசு செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

அயல் நாடுகளின் தாக்குதல் களிலிருந்து நாட்டை காப்பாற்றிக் கொள்வ தற்காக ராணுவ பலத்தை பெருக்க பிரம்மாண்ட திட்டம் வகுக்கப் பட்டது.


இந்த திட்டத்தின்படி, வகுக்கப்பட்ட வியூகங்களில் ஒன்றுதான் சுரங்க விமானப் படை தளம்.

அதாவது, மலையை குடைந்து பிரம்மாண்ட மான விமானப் படை தளத்தை அமைக்க யுகோஸ்லேவியா அரசு முடிவு செய்தது.

போஸ்னியா அருகே பிஹாக் நகருக்கு அருகில் இருந்த ஜெஸிவிகா மலையின்

அடிப்பகுதி யில் சுரங்கப் பாதை அமைத்து இந்த புதிய விமானப் படை தளம் அமைக்கப் பட்டது.
பணிகள் "Objekat 505" என்ற குறியீட்டுப் பெயரில் இந்த சுரங்க விமானப் படை தளம் அமைக்க ப்பட்டது.

1948ம் ஆண்டு துவங்கிய பணிகள் 1968ல் முடிவடைந்தது. கிட்டத்தட்ட

இரண்டு தசாப்தங்கள் எடுத்துக் கொண்டு இந்த விமானப் படை தளம் அமைக்கப் பட்டது.

இந்த விமானப் படை தளம் 6 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டது.

ஐரோப்பாவின் மிக அதிக திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட் ராணுவ கட்டமைப்பு என்பதுடன்,

உலகிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்க ப்பட்ட விமானப் படை தளங்களில் ஒன்றாகவும் கருதப்பட்டது.


எதிரிகளின் தாக்குதல் தகவல்கள், ராணுவ தகவல்களை ஒருங்கிணை க்கும் மையமாக செயல்படும் விதத்தில்

இந்த விமானப் படை தளம் அமைக்கப் பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடார் கட்டமைப்புடன் அமைக்கப் பட்டது.

நீளம் இந்த சுரங்கப் பாதைகள் 3.5 கிமீ நீளம் கொண்டதாக அமைக்கப் பட்டிருந்தது.

உட்புறத்தில் பதுங்கு குழிகளும் இருந்தன.

இந்த கதவுகள் நிலையான இறக்கை அமைப்புடைய போர் விமானங் களுக்கு தகுந்தவாறு மாற்றங்களை செய்து திறக்க முடியும்.
ஜப்பானிலுள்ள நாகாசாகி நகரின் மீது வீசப்பட்ட அணு குண்டுக்கு இணையான அணு குண்டு தாக்குதல் களில் கூட

இந்த விமானப்படை தளம் சேதமடையாத வண்ணம் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. 

அதாவது, 20 கிலோடன் அணுகுண்டு தாக்குதல் களையும் சமாளிக்கும் திறன் கொண்டது.

அணுகுண்டு தாக்குத ல்களால் பாதிப்பு ஏற்படாத வகையில், விசேஷ வாயிற் கதவுகளை கொண்டது. 

உட்புறத்தில் ஒவ்வொரு விமானத் திற்கும் தனித்தனியாக நிறுத்து வதற்கான அறைகளுடன் கட்டமைக்கப் பட்டிருந்தது.

விமானத்தை பழுது நீக்குவ தற்கான கட்டமைப்பு வசதிகளுடன் சுரங்கத்திற் குள்ளேயே இருந்தன.


இந்த சுரங்கப் பாதை முழுவதும் மேற்புறம் மற்றும் பக்க வாட்டில் கான்கிரீட் பூச்சு மூலமாக சேதமடையாத வகையில், பாதுகாக்கப் பட்டிருக்கிறது.

விமானப் படை வீரர்கள், பணியாளர்கள் என 1,000 பேருக்கு தங்குவ தற்கான குடியிருப்புகள் கொண்டதாக இருந்தது.

30 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற வற்றை உட்புறத்திலேயே இருப்பு வைக்க முடியும்.

மின் உற்பத்திக்காக 2 மின்சார ஜெனரேட்டர்கள் இருந்தன.

விமானங்கள் மற்றும் அந்த தளத்தின் ராணுவ வாகனங் களுக்கு தேவையான எரிபொருள் குழாய் வழியாக

போகோஜ் மலையி லிருந்து இந்த சுரங்க விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விமானப்படை தளத்தில் 5 ஓடுபாதைகள் கொண்டதாக அமைக்கப்பட்டு இருந்தது.

சுரங்கத்தின் ஒரு முனையி லிருந்து மற்றொரு வாயில் வழியாக வெளியேறும் விதத்தில் கட்டமைப்பு வசதிகளை கொண்டது.

எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் வருவதை கண்டறிந்து பதிலடி கொடுப்ப தற்காக ஏவுகணை களும் பொருத்தப்பட்டு இருந்தன.

வாயிற் பகுதிகளில் அதிக கண்காணிப்பு கொண்டதாக இருந்தது.

அத்துமீறி உள்ளே புக முனைபவர்களை எந்த அனுமதியும் இன்றி சுட்டுத் தள்ளுவதற்கு பாதுகாவல ர்களுக்கு அனுமதி தரப்பட்டி ருந்தது.

உள்ளே செல்வதற்கு கடும் கட்டுப் பாடுகளும், அனுமதி வழிமுறை களும் கடை பிடிக்கப்பட்டன.


உள்நாட்டு போர்களால் யுகோஸ்லேவியா கடுமையாக பாதிக்கப் பட்டது.

போஸ்னியா, குரோஷியா உள்ளிட்ட பல நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டி கலகங்கள் மூண்டது. 

இதனால், யுகோஸ்லேவியா சிதறுண்டது. அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசும் வீழ்ந்ததோடு,

இந்த விமானப்படை தளமும், உள்நாட்டு போரின் போது கடுமையாக சேதமடைந்தது.

தற்போது இந்த விமானப்படை தளம் கைவிடப் பட்டதால், தற்போது மிக மோசமான நிலையில், இருக்கிறது.

தற்போது அங்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் சென்று அந்த சுரங்கத்தை பார்வையிட்டு


அதன் கட்டுமான ஆச்சரிய த்தையும், தற்போதைய நிலை குறித்து படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர்.

பிஹாக் நகராட்சி தற்போது இந்த விமானப்படை தளத்தின் ஓடுபாதைகளை பயன்படுத்தி,

உள்நாட்டு விமான போக்குவரத்தை துவங்கு வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
Tags:
Privacy and cookie settings