உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற !

வாழ்க்கை நாம் வாழ்வதற்கு மட்டுமே நம்மை இறைவன் படைத்து இருக்கிறான் 


நாம் அதை வாழ விரும்பா விட்டாலும் வாழ்ந்து தான் ஆக வேண்டும். இல்லையேல் நாம் என் பிறக்க வேண்டும் . 

நம்மை என் அந்த இறைவன் படைத்தான் என்பதை நாம் சிந்தித்தாவது பார்க்க வேண்டும்.

நாம் வாழும் வாழ்க்கை ஒருமுறை மட்டுமே நம்மை இவ்வுலகில் நிலைக்கச் செய்யும்

அந்த வாழ்க்கை நாம் இறந்த பின்னும் நிலைக்க நாம் பிறரை வாழ வைக்க வேண்டும் 

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சி னையையும்

நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக் காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.

2. பிறரைக் காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.


அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்று கொண்டு விளக்கத் தேவை யில்லை.

நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற் கான காரணங் களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம்.

அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வ தாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொரு வரையும் நேசிக்க இயல வில்லை

என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று.

வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொரு வரும் உலகத்தை மாற்ற நினைக் கிறார்களே யொழிய தம்மை மாற்றிக் கொள்ள நினைப்ப தில்லை.

அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொரு வரையும் நம்புவது அபாயகர மானது.

அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகர மானது.


ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்

அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்த தில்லை என்று பொருள்.

சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள்.

ஏனெனில் அவைக ளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

நண்பர்களே “மன உறுதியை சோதனை செய்யவே தோல்விகள் ஏற்படுகின்றன.

ஆகவே இத்தகைய சோதனை களில் நீங்கள் தோற்று விடக்கூடாது”

“உங்களின் நம்பிக்கையின் அளவிற்குத் தான் உங்களால் ஆசைப்பட முடியும்.

நீங்கள் ஆசைப்படும் அளவிற்குத் தான் உங்களால் அடைய முடியும்” 

அலெக்ஸாண்டர் போப். 

“வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் நாம் எங்கு நிற்கிறோம் என்பதல்ல. எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே”

“தவறு செய்து விட்டதாக ஒப்புக் கொள்ள வெட்கப் படாதீர்கள்.

ஒப்புக் கொண்டால் நேற்றை விட இன்று நீங்கள் அதிக புத்தி சாலியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்”


ஹாமில்டன் ஹோல்ட் 

வேலை, தொடர்ந்த இடைவிடாத கடினமான வேலை தான் நீடித்த பலன்களைக் கொடுக்கும்.

பாதி முயற்சி செய்தால் பாதிப்பலன் கிடைக்கும் என்று நினைக் காதீர்கள். அதில் பலனே கிடையாது”

கலீல் கிப்ரான்

“தனிமையில் பலசாலி வளர்கிறான். பலவீனன் தேய்கிறான்” 

“வேறொருவர் வந்து நமக்கு அமைதியைத் தர முடியாது. வேறொருவர் நம்மை அன்பு மயமாக்க முடியாது.

வேறொருவர் நமக்கு மகிழ்ச்சியைத் தந்து விட முடியாது.

இவற்றை யெல்லாம் நமக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்ளுவது எப்படி என்று நாமே கற்றுக் கொள்ள வேண்டும்”

“இன்றைய நமது கடமையும் இன்றைய நாளும் மட்டுமே நமக்குச் சொந்த மானவை. பலன்கள் எதிர் காலத்தில் நிர்ணயிக் கப்படுகி ன்றன” 

விதுரநீதி 

“அளவுக்கு மிஞ்சிய தூக்கம், மயக்கம், தேவை யில்லாத பயம், ஆத்திரம், சோம்பல்,


எதையும் தாமதமாகச் செய்தல் இவை ஆறும் முன்னேற்றப் பாதையின் முட்டுக் கட்டை களாகும்”

“பேசாமல் இருப்பது நல்லது. ஆயினும் அவ்வப்போது பேசுவது சிறந்தது. இரண்டு விஷயங்கள் அறிவுக்குப் பொருந்தாதது.

பேச வேண்டிய போது பேசாதது. பேச வேண்டாத போது பேசுவது”
Tags:
Privacy and cookie settings