மக்களே புறக்கணிப்போம் நட்சத்திர கிரிக்கெட்டை !

மக்களே நாம் நடுத்தர வர்க்கமாக வாழ்ந்து வருகிறோம் ஆனால் கோடியில் புரளும் நடிகர்கள் இன்று அவர்களுக்கு என ஒரு கட்டிடம் கட்ட நிதி கேட்கிறார்கள் நம்மிடம். 
மக்களே புறக்கணிப்போம் நட்சத்திர கிரிக்கெட்டை !
இதனால் நமக்கு எள்ளளவும் பயன் உண்ட சிந்தியுங்கள் அவர்கள் நடத்தும் ஆட்டத்தை நாம் பார்த்து என்ன செய்யப் போகிறோம். 

அந்த கிரிக்கெட்டை காண டிக்கட் என்ற முறையில் அவர்கள் வசூலிக்கும் தொகை யாருக்கு பயன்படப் போகிறது .
அவர்கள் கட்டிடம் கட்டி சுகபோகமாக வாழ 5 - க்கும், 10 - க்கும் கூலி வேலை செய்து பிழைக்கும் நம்முடைய பணம் தேவைப்படுகிறது. 

ஆனால் நாம் வெய்யிலில் வீடில்லாமல் உறங்குகிறோம் நமக்கு உதவ அவர்கள் வருவார்களா? கேளுங்கள் .

அந்த கிரிக்கெட்டை காண செலவு செய்யும் தொகை மூலம் இல்லாத ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்து கொடுத்தால் அவர்கள் பயன் பெறுவார்கள் .

ஆனால் இவர்களிடம் கொடுத்தால் என்ன கிடைக்கும்  தயவு செய்து சிந்தித்து பாருங்கள் கேளிக்கையை விரும்பாதீர்கள் சுகபோகம் நமக்கு வாழ்வு தராது தர்மமே நம்மை காக்கும்.
கீழே படித்து பாருங்கள் !

தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

மாதம் 70 ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.

மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசுஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும். ‪

நம்‬ அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும். ‪
‎ஒரு‬ நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.

திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும் கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.

படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன் கூட அனுபவிக்காது. 

வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.
இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச்செலவு.
ஒரு ஆண்டில் 3 படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து 10 கோடி வரிஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.

பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டிடங்கள் கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான். நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாக செல்கிறது.

மேற்கூறிய இந்த ஏழைகளின் நடிகர்சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். 

அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைக்க போகிறார்களாம்.

புயல் வெள்ளத்தில்நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாய் நின்ற போது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்ன இவர்கள் தற்போது நம்மிடம் கிரிக்கெட் மூலமாக வசூல் என்ற பவருகிறார்கள்.
மக்களே புறக்கணிப்போம் நட்சத்திர கிரிக்கெட்டை !
ஆகையால் மானமுள்ள நம் மக்கள் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டும்.
இந்த செய்தியை முடிந்த வரை அனைத்து குழுக்களுக்கும் பகிரவும். அரசியல்வாதிகளிடம் ஏமாறுகிறோம். இந்த கூத்தாடிகளிடமும் ஏமாற வேண்டுமா.

இதை தயவு செய்து அதிகம் பரப்புங்கள். அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் .
Tags:
Privacy and cookie settings