பிரித்தானிய பெண்கள் மார்பங்கள் மீது சூடு வைத்துக் கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்பி Jake Berry .கூறியுள்ளார்.
கமெரூனை பிறப்பிடமாக கொண்ட இந்த பழக்கவழக்கங்கள் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக நடைபெறுகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் மார்பகங்கள் ஆண்களை கவரும் வகையில் கவர்ச்சியாக வளரக் கூடாது என்பதற்காக,
சூடான கற்கள், பெரிய கட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தி மார்பகங்கள் மீது சூடு வைக்கின்றனர். மேலும், மார்பகங்கள் கடினமான பெல்ட் கொண்டும் கட்டப்படுகிறது,
தற்போது இது போன்ற அபத்தமான செயல்களால் உலகளவில் 3.8 மில்லியன் பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய மக்களும் இந்த பழக்க வழக்கத்தை பின்பற்றுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்பி Jake Berry கூறியதாவது, இந்த செய்தியை கேட்டவுடன் நான் அதிர்ந்து போனேன்,
பிரித்தானியாவில் சுமார் 1,000 பெண்கள் இது போன்ற கொடூர பழக்க வழக்கத்தால் பாதிக்கப் படுகின்றனர்.
இதனை, வாரத்திற்கு இரண்டு முறை மேற்கொண்டால் பெண்களுக்கு இயற்கையான மார்பக வளர்ச்சி இருக்காது.
மேலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு வலியால் அவுதியுறும், அவர்கள் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
இந்த ஆபத்தான பழக்க வழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பழக்க வழக்கத்தை பின்பற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது குறித்து பெண்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் நிறுவனர் Margaret Nyuydzewira கூறியதாவது, தற்போதைய நாட்களில் இந்த பழக்க வழக்கம் பிரித்தானியாவில் பின்பற்றப் படுகிறது.