இதோ இது போன்ற ஒரு சம்பவம் திரு குர்ஆன் கூறுகிறது ... இவற்றைஅல்லாஹ் திருக்குர்ஆனில் 21 : 87 >88 ல் கூறுகிறான்.
وَذَا النُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ. فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِين
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது. (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்;
எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”என்று பிரார்த்தித்தார். எனவே.நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம்.
இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம். –அல்குர்ஆன் 21 : 87-88
மீன் வயிற்றிலிருந்து வெளியேறிய யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மீனின் வயிற்றிலிருந்து கொடிய சூட்டின் காரணமாக தலைமுடி, தாடி முடி மற்றும் உடலின் எல்லாப் பாகங்களிலிருந்த முடிகள் அனைத்தும் உதிர்ந்து போயிருந்தன.
அவர்களால் எழுந்து உட்காரவோ, நடமாடவோ முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையைப் போக்க அல்லாஹ் அவர்கள் அருகில் ஒரு சுரைக் கொடியை முளைப்பித்தான் அது அவர்களுக்கு நன்றாக நிழல் கொடுத்தது.
காலையிலும்,மாலையிலும் ஆடு ஒன்று மற்ற அறிவிப்பின்படி மான் ஒன்று பால் கொடுத்து வந்தது. இப்படியே நாற்பது நாட்கள் ஓடிவிட்டன.
நாற்பது நாட்களுக்குப் பிறகு யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெம்பு ஏற்பட்டது. எழுந்து உட்காரவும், நடக்கவும் முடிந்தது. முகத்திலும், தலையிலும், உடலிலும் முடி முன்போல் நன்றாக வளர்ந்து காணப்பட்டது.
وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ. إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ . أُولَٰئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ. فَوَاكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ . فِي جَنَّاتِ النَّعِيمِ . عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍ . بَيْضَاءَ لَذَّةٍ لِّلشَّارِبِينَ . لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ .
மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் – அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர். நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர்.
இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).ஆகவே, அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்;
ஒரு மீன் விழுங்கிற்று.ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து – தஸ்பீஹு செய்து – கொண்டிராவிட்டால் – (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை,அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
ஆனால்,அவர் நோயுற்றிருந்த நிலையில்நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.மேலும் நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 37:139-147வரைஅழகாக கூறுகிறான்.
ஒவ்வொரு காலத்திற்கும் அல்லாஹுத் த ஆலா தனது அத்தாட்சிகளை வெளிகாட்டிக் கொண்டுதான் இருக்கிறான் ...
சிந்திப்பவர்களுக்கு நேர்வழி கிடைக்கும்...