சீனாவில், உடல் எடையை குறைப்பதற்காக நடனமாடிய சிறுவனின், வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இணையத்தில் 2 வீடியோக்கள் மிக வைரலாக பரவி வருகிறது. அதில் ஒன்று அர்ஜெண்டினாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசிய டாங்கோ நடனம். மற்றொன்று சீனாவில் 9 வயது சிறுவன் ஆடும் லத்தீன் நடனம்.
இதில் அதிபர் ஒபாமாவும், மிசெல் ஒபாமாவும் நடன கலைஞர்களுடன் இணைந்து அவர்களுக்கு ஏற்ற பாணியிலேயே நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
அந்த வீடியோ இணையத்தில் பலரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வந்தது.
வீடியோவை பாருங்கள்........!
அதேபோல், மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள லூஓயங் நகரைச் சேர்ந்த சிறுவன் சியாங்ஃபெய் (Xiongfei) லத்தீன் நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.
9 வயதான சிறுவனின் உடல் எடை, 65 கிலோவாக உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லத்தீன் நடனப்பயிற்சி பெற்று வரும் அச்சிறுவன்,
உடல் எடையை பொருட்படுத்தாமல் நடன ஆசிரியருடன் இணைந்து நடனமாடிய வீடியோ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22ம் தேதி அச்சிறுவன் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் சிறுவன் அந்த இசைக்கு ஏற்றாற்போல் நடனமாடியது
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதிலும் சிறுவனின் உடல் அசைவு மற்றும் முக பாவனையே வீடியோவின் சிறப்பு அம்சமாகும்.
தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை, இணையத்தில் லட்சக் கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர்.
சிறுவனின் உடல் எடையை குறைக்கவே லத்தீன் நடன வகுப்புக்கு அனுப்பி வைத்தாக அச்சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.