காலங்காலமாக, தெற்கு சைபீரியா என்று இன்று அறியப்படுகிற தொலைதூரப் பகுதியில் வாழ்ந்த மங்கோலிய இன பழங்குடியினர் இந்த ஏரியைப் புனிதமாகக் கருதி வந்தார்கள்.
மிகப் பெரிய ஏரிகள் பல இருந்தாலும் இந்த ஏரி தான் உலகத்திலேயே மிக ஆழமான நன்னீர் ஏரி; ஏராளமான தண்ணீர் நிறைந்த ஏரி.
இந்தப் பெயருக்கு, வளமான ஏரி அல்லது கடல் என்று அர்த்தமாம். சொல்லப் போனால், இந்த ஏரி மிகப் பெரியதாக இருப்பதாலும்,
விரைவாக ஆவியாவதாலும் படகோட்டிகள் சில சமயம், கடலுக்குப் போகிறேன் என்று அதன் கரையோரங்களில் பேசிக் கொள்வா ர்கள்.
ரஷ்யர் களின் இருதயத் தில் பைகால் ஏரிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. குழந்தை பருவத்திலேயே அனைவரும் கற்றுக் கொண்ட ஓர் இனிய இசை என்று மாஸ்கோவைச் சேர்ந்த அறிவியலாளர் ஒருவர் அதை அழைத்தார்.
ஓர் அழகான இசைக்கு அநேக குறியீடுகள் இருப்பது போல, மனதைச் சொக்க வைக்கும் அழகிய கடற்கரைகள், பளிங்கு போன்ற தண்ணீர்,
எங்கும் காண முடியாத பல்வகை உயிரினங்களின் கதம்பம் என எண்ணற்ற சிறப்பம் சங்கள் பைகால் ஏரிக்கு உண்டு.
பைகால் ஏரியின் மிக அகண்ட பகுதி, 636 கிலோ மீட்டர் நீளமும் 80 கிலோ மீட்டர் அகலமும் உடையது. விண்வெளி யிலிருந்து இதைப் பார்க்கும் போது, பாதி திறந்திருக்கும் நீல நிறக் கண்ணைப் போல இருக்கிறது.
உலகிலுள்ள மொத்த நன்னீரில் ஐந்தில் ஒரு பங்கு தண்ணீர் இங்கு தான் இருக்கிறது. இது, வட அமெரிக்கா விலுள்ள ஐந்து மிகப் பெரிய ஏரிகளிலுள்ள மொத்தத் தண்ணீரையும் விட அதிகமாம்!
பைகால் ஏரி 1,600 மீட்டருக்கும் அதிக ஆழமுள்ளது; ஒரு வேளை இந்த ஏரி திடீரென வற்றி விட்டால், அதை மீண்டும் நிரப்ப உலகிலுள்ள அனைத்து நதிகளின் தண்ணீரையும் ஒரு வருடத்திற்கு அதற்குத் திருப்பிவிட வேண்டியி ருக்குமாம்!
கண்டங் களின் மோதல்
பூர்வ காலத்தில், யுரேஷியன் கண்டம் இந்திய துணைக் கண்டத்தோடு மோதிய தால் பைகால் பிளவு உருவானது என்றும், பூமிக்கடியில் இருக்கும் மாபெரும் பாறைகள்
அலுமினியத் தகடு போல நசுக்கப்பட்டு, பூமியின் மேற்பகுதி தள்ளப் பட்டு, இமயமலை உருவானது என்றும் புவியியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
கண்டங்களின் இந்த மோதலால், சைபீரியாவில் ஆழமான பிளவுகள் ஏராளமாய் ஏற்பட்டதாக சிலர் கருதுகிறார்கள். இப்படி உருவான ஒன்று தான் பைகால் பிளவு ஆகும்.
காலப் போக்கில், அருகிலி ருந்த மலைகளி லிருந்து அரித்துக் கொண்டு வரப்பட்ட வண்டல் மண்ணால் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பிளவு நிரப்பப் பட்டது;
அதன் பிறகு, நீர் நிரம்பி பைகால் ஏரியாக உருமாறியது. இப்பொழுது, 300-க்கும் மேற்பட்ட ஆறுகளும் சிற்றாறுகளும் இந்த ஏரியில் சங்கமிக்கின்றன. அங்காரா என்ற ஆறு மட்டுமே இங்கிருந்து உற்பத்தியாகி ஓடுகிறது.
உலகிலுள்ள பண்டைய ஏரிகளில் பலவற்றைப் போல, கசடுகள் நிறைந்த தாகவோ சேறும் சகதியும் மண்டியதாகவோ பைகால் ஏரி மாறி விடவில்லை.
ஏரிக்க டியில் இருக்கும் புவியோ ட்டின் மிருது வான தட்டுகள் இன்னும் மெல்ல மெல்ல நகர்ந்து, பிளவை அதிகரித்துக் கொண்டு இருப்பது தான் அதற்குக் காரணம் என்று அறிவிய லாளர்கள் கருதுகிறார்கள்.
எனவே, ஏரி வண்டல் மண்ணால் நிரம்புவ தற்குப் பதிலாக, ஒவ்வொரு வருடமும் அது ஆழமாகிக் கொண்டே போகிறதாம்!
புவியோட்டின் தட்டுகள் நகருவது, ஏரிக்கடி யிலிருந்து வெந்நீர் ஊற்றுகள் பீறிட்டு வருவதற்குக் காரணமாகிறது.
பைகால் ஏரிக்குள்ளே
பைகால் ஏரியின் மையப்ப குதியை படகில் கடந்து சென்ற சிலர் பயந்திருக் கிறார்கள். ஏனென்றால், அந்தப் பளிங்கு போன்ற தண்ணீரில் பார்க்கையில் 150 அடி ஆழம் வரை இருப்ப தெல்லாம் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
ஏரியில் நிறைந்திருக்கும் எபிஷூரா என்ற மெல்லுடலி, ஏரியைத் துப்புர வாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அநேக ஏரிகளைப் பாழாக்கும் பாசிகளையும் நுண்கி ருமிகளையும் கபளீகரம் செய்கிறது.
இந்தத் துப்புரவாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதைப் போல், உயிரினக் கழிவுகள் அழுகிப் போவதற்கு முன் அவற்றை ஏரியில் உலாவிக் கொண்டிருக்கும் எண்ணற்ற நன்னீர் நண்டு இனங்கள் தின்று விடுகின்றன;
அதனால், தண்ணீர் மிகவும் சுத்தமாக இருக்கிறது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் ஆய்வக பரிசோதனைக்காக ஒரு கண்ணாடிப் பாத்தித்தில் ஏரியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்தார்கள்;
அந்தப் பாத்திரத்தால் தண்ணீர் மாசுபட்டுவிட்ட தென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
பைகால் ஏரியின் தண்ணீர் பளிங்கு போல் இருப்பது உலகறிந்த உண்மை; அதோடு, அதில் பிராண வாயு மிகமிக அதிகமிருக்கிறது. சில ஆழமான ஏரிகளில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்குப் பிறகு பிராண வாயு இருக்காது.
இத்தகைய ஏரிகளில் உள்ள உயிரினங்கள் ஆழமற்ற பகுதிகளில் வாழும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன.
ஆனால், பைகால் ஏரியில் கிடை மட்டமாகவும் செங்குத்தாகவும் செல்லும் நீரோட்டங்கள் வெகு ஆழம் வரை பிராண வாயுவை எடுத்துச் சென்று அதைத் தண்ணீ ரோடு இரண்டறக் கலந்து விடுகின்றன.
இதனால், ஏரி முழுவதும் உயிரினங்கள் தான். குளிர்ந்த, சுத்தமான அந்தத் தண்ணீருக்கு அடியில் ஒரு காடே செழிப்பாய் வளருகிறது. பச்சைப் பசேலென இருக்கும் கடற்பாசிகள் பவழப் பாறையைப் போல பரந்து விரிந்து,
ஏராளமான குட்டி உயிரினங்களுக்கு அடைக்கலம் தருகின்றன. ஏரியின் வெந்நீர் ஊற்றுகளைச் சுற்றிலும் உஷ்ணத்தை விரும்பும் அநேக உயிரினங்கள் குடும்பம் குடும்பமாக கும்பலாய் குடியிருக்கின்றன.
2,000-க்கும் அதிகமான சின்னஞ்சிறு உயிரினங்கள் இந்த ஏரியில் வாழ்கி ன்றன. அவற்றில் 1,500 வகை உயிரினங்களை பைகால் ஏரியில் மட்டுமே காண முடியும்.
மீனவர்கள் பொக்கிஷமாகக் கருதும் ஓமல் என்ற ஆர்க்டிக் வெள்ளை மீனுக்கு பைகால் ஏரி பெயர் போனது. உலகில் வேறெங்கும் காணப்படாத மற்ற உயிரினங்களும் இங்கே உண்டு.
பல விரிகுடாக்களும் நிலக் கூம்புகளும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.
நீர்ப்பரப்பும் வானமும் நிறம் மாறிக் கொண்டே இருக்கின்றன. வருடத்தின் பிற்ப குதியில், ஏரியில் பெரும்பாலும் புயல் வீசுகிறது.
ஒரு வகையான தட்டைப்புழு, ஓர் அடிக்கும் அதிக நீளத்திற்கு வளருகிறது; அது மீன்களையே விருந் தாக்கிக் கொள்கிறது. ஒற்றைசெல் உயிரிகள் கூட மண் துகள்களில் வாழுகின்றனவே!
கலமி யாங்கா என்ற மீனுக்கு இந்த ஏரி பிரசித்தி பெற்றது. பைகால் ஏரியில் மட்டுமே காணப்படும் இந்த மீன், இங்கு வாழும் உயிரினங் களிலேயே சற்று விசித்திரமானது.
ஒளி ஊடுருவும் தன்மை படைத்த இந்தச் சிறிய கலமி யாங்கா மீன், பல நிறங்கள் காட்டும் பகட்டுக் காரியாய் உலா வருகிறது. கிட்டத்தட்ட ஏரியின் அடிமட்டத்தில் இது வாழ்கிறது.
முட்டையிட்டுக் குஞ்சு பொரிப் பதற்குப் பதிலாக குட்டி போடுகிறது. இதன் உடலில் மூன்று பங்கு கொழுப்பும், ஏராளமான ‘ஏ’ உயிர்ச் சத்தும் இருக்கிறது.
அதிக அழுத்த மிருக்கும் 200 முதல் 450 மீட்டர் ஆழத்திலும் கூட இது தாக்குப் பிடிக்கிறது. என்றாலும், சூரிய ஒளி அதன் மீது படுகையில் அதன் உடல் கரைந்து, எலும்பும் கொழுப்பும் மட்டுமே மிஞ்சுகிறது.
இந்த மீனைக் கண்டாலே, பைகால் ஏரியில் வாழும் கடல் நாய்களுக்கு வாயில் எச்சில் ஊறும்.
உலகிலேயே இவை தான் நன்னீரில் மட்டுமே வாழும் கடல் நாய்கள். இது பைகாலில் காணப்படும் உயிரினங் களிலேயே அதிக பிரசித்தி பெற்றது.
பருவகால மாற்றங்கள்
வருடத்தில் சுமார் ஐந்து மாதங்க ளுக்கு பைகால் ஏரி பனிக்கட்டி யாய் உறைந்து விடுகிறது. ஜனவரி மாதத்தின் பிற்ப குதியில் பனிக்கட்டி ஒரு மீட்டரு க்கும் அதிக பருமனு ள்ளதாய் ஆகி விடுகிறது.
பார்ப்பதற்கு, பளபளப்பான கற்கள் பதிக்கப்பட்டது போன்று இருக்கிறது. சூரிய ஒளியில் தகதகவென மின்னும் ஜன்னல் கண்ணாடி போல ஜொலிக்கிறது.
பனிக்கட்டி மெல்லிய தாக இருப்பதுபோல் கண்ணா மூச்சி காட்டுகிறது. அதன் மேல் நடந்து போகிறவர்கள் ஏரிக்கடியில் இருக்கும் பாறைகளைப் பார்க்க முடிகிற அளவிற்கு தெளிவாக இருக்கிறது.
உண்மையில், இந்தப் பனிப்பாறைகள் பொதுவாகவே அசாதாரண உறுதியோடு இருக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே போர் நடந்தது.
உண்மையில், இந்தப் பனிப்பாறைகள் பொதுவாகவே அசாதாரண உறுதியோடு இருக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே போர் நடந்தது.
குளிர் காலத்தில் ரஷ்யப் படைகள் பனியைக் கடப்பதற்கு அதன் மீது ரயில் தண்ட வாளங்களை அமைத்து, 65 ரயில் பெட்டிகள் வெற்றி கரமாக இழுத்துச் செல்லப் பட்டனவாம்!
ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதி யிலிருந்து ஜூன் மாதம் வரைக்கும் இடியோசை போன்று பெரும் சத்தத்தோடு பனிக்கட்டியில் விரிசல் விழுந்து, உடைந்து சிதறுகிறது.
ஏரியி லிருந்து வந்த வண்ணமிருக்கும் இந்த ஓசையை பனி இசை என்று உள்ளூர் வாசிகள் அழைக்கிறார்கள்.
ஏரியி லிருந்து வந்த வண்ணமிருக்கும் இந்த ஓசையை பனி இசை என்று உள்ளூர் வாசிகள் அழைக்கிறார்கள்.
அந்தப் பனிஓசை, சின்ன ஜாலராவின் மணியோசை போலவும் கூடையில் போடப்பட்டிருக்கும் பூனைகளின் முனகல் ஒலி போலவும் இருப்பதாக இயற்கை அறிவியலாளர் ஜெரல்ட்டரல் எழுதினார்.
விரைவில், பருவ நிலையில் உஷ்ணம் அதிகரிக் கும்போது காற்றும் அலையும் சேர்ந்து பனிக்கு வியலை மின்னும் பொற்கு வியலாய் கரையில் வாரியிறை க்கின்றன.
ஏரியில் தண்ணீர் தட்டுப் பட்டவுடன் பறவைகள் மீண்டும் அதை நலம் விசாரிக்கத் திரும்பி வருகின்றன. டிப்பர் இனப் பறவைகள் போன்றவை குளிர் காலம் முழுவதும் அங்காரா நதியின் முகப் பிலேயே தங்கி விடுகின்றன;
ஏனென்றால், ஏரியின் அந்தப் பகுதி தான் உறைந்து போவதே யில்லை. பின்னர், அவை வாத்து, அன்னம் (whooper swans), சாம்பல் நாரை போன்ற நீந்தும் பறவைக ளோடு சேர்ந்து கொள்கி ன்றன.
ஜூன் மாதம் ஏரிக்குச் செல்பவர்கள், பாறைகளில் திரள் திரளாக இருக்கிற முட்டைப் புழுக்களை தின்பதற்கு கரையோரம் வருகிற கரடிகளைப் பார்க்கலாம்.
இந்தப் முட்டைப் புழுக்கள் பின்னர் காடஸ் பூச்சிகளாக உருமாறும். கரடிகள் குதூக லமாய்த் தங்களுடைய நாக்கால் நக்கி அந்தப் பூச்சிகளைத் தின்கின்றன.
அவற்றைச் சுற்றி ஒய்ங்... என்ற ரீங்காரத்துடன் பறக்கும் பூச்சிகளை அவை சட்டை செய்வதே இல்லை.
இந்தச் சமயத்தில், கரடிகளின் கூட்டத்தால் கவரப்பட்டு, இரையை ருசிக்க ஏராளமான விலங்குகளும் பறவைகளும் கரையோரத்திற்குப் படையெடு க்கின்றன.
வசந்த காலத்தின் துவக்கத்திலும் கோடை காலத்திலும் கடற்பாசிகள் மெதுவாக வளர ஆரம்பிக்கின்றன; இவை, சிறிய உயிரினங்களுக்கு உணவாகின்றன.
நீருக்கு பச்சை நிறம் பூசுகின்றன. என்றாலும், பொதுவாக கரையிலிருந்து பார்க்கும் போது பைகால் ஏரியின் தண்ணீர் நீலம் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
நடுவே இருக்கும் தண்ணீர் ஒரு சமுத்திரத்தைப் போல அடர்த்தியான நீல நிறத்தில் காட்சியளிக்கும். மணல் குன்றுகளும் கம்பீரமாய்த் தோற்றமளிக்கும் கூர்மையான பாறைகளும் கரையோரம் இருக்கின்றன.
பல விரிகுடாக்களும் நிலக் கூம்புகளும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.
பரந்து விரிந்து கிடக்கும் பைகால் ஏரி, மென்மையான ஒரு முத்தைப் போல தொடர்ந்து வர்ண ஜாலம் புரிகிறது என்று ஓர் எழுத்தாளர் அதை வருணிக் கிறார்.
நீர்ப்பரப்பும் வானமும் நிறம் மாறிக் கொண்டே இருக்கின்றன. வருடத்தின் பிற்ப குதியில், ஏரியில் பெரும்பாலும் புயல் வீசுகிறது.
இலையுதிர் காலம் வந்தால், சில சமயம் ஏரியின் மேல் சூறாவ ளியின் மூர்க்கத் தோடு காற்று வீசுகிறது. அந்தக் காற்று சலனமற்று,
அமைதலா யிருக்கும் நீர்ப்பரப்பை மின்னல் வேகத்தில் பயங் கரமாய்க் கொந்த ளிக்கச் செய்து, 4 முதல் 6 மீட்டர் உயரத் திற்கு அலை களை எழும்பி நிற்கச் செய்யலாம்.
ஏரியைச் சுற்றி கம்பீரமாய் காட்சியளிக்கும் நான்கு மலைத் தொடர்கள் பனி மான்களுக்கும் அழிந்து வரும் சைபீரிய மலை ஆடுகளுக்கும் புகலிடமாகத் திகழ்கின்றன. தாழ்வான பகுதிகளில் புல்வெளிகள் அமைந்துள்ளன.
அமேசான் காடுகளைப் போலவே, இவையும் உலகின் சுற்றுச்சூழலையும் சீதோஷ் ணத்தையும் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பற்பல பறவை யினங்கள் இங்கே குடியிருக்கின்றன.
வருடத்தின் மற்ற சமயங்க ளிலும் கூட, பெரிய பயணக் கப்பல் களையும் மீன் பிடி படகுகளையும் இந்தக் காற்று மூழ்கடித்து விடுவதாகச் சொல்லப் படுகிறது.
கொட்டிக் கிடக்கும் இயற்கைக் காட்சிகள்
சைபீரியா கரடு முரடான இடமாக இருப்பதால், அங்கி ருக்கும் பைகால் ஏரியை பார்க்கும் போது யாரையும் நெருங்க விடாத, உணர்ச் சியற்ற ராட்சதனைப் போன்று தோன்றலாம்.
ஆனால், உண்மையில் எக்கச்சக்கமான வன விலங்குகளை வாரியணைத்து, விதவிதமான இயற்கைக் காட்சிகள் சூழ அது அமைந்துள்ளது.
ஆனால், உண்மையில் எக்கச்சக்கமான வன விலங்குகளை வாரியணைத்து, விதவிதமான இயற்கைக் காட்சிகள் சூழ அது அமைந்துள்ளது.
ஏரியைச் சுற்றி கம்பீரமாய் காட்சியளிக்கும் நான்கு மலைத் தொடர்கள் பனி மான்களுக்கும் அழிந்து வரும் சைபீரிய மலை ஆடுகளுக்கும் புகலிடமாகத் திகழ்கின்றன. தாழ்வான பகுதிகளில் புல்வெளிகள் அமைந்துள்ளன.
இந்த அடர்ந்த புல்வெளிகளில் சில, சைபீரியாவின் மலர் மெத்தைகள் என அழைக்கப் படுகின்றன. ஏனென்றால், விசித்திரமான பலரக காட்டுப்பூக்கள் இங்கே இருக்கின்றன.
இந்தச் சமவெளியில் காணப்படும் அரிய பறவைகளில், நளினமாய் காட்சிய ளிக்கும் டெம்வசெல் என்ற ஒருவகை நாரை இனமும் ஆசியா விலேயே மிகப் பெரிய பறவையான பஸ்டார்ட் பறவையும் உள்ளன.
பைகால் ஏரியைச் சுற்றி மண்டிக் கிடக்கும் அடர்த்தி யான ஊசியி லைக் காடுகள் அதன் மற்றொரு சிறப்பு. இந்தக் காடுகள், பிரேசிலின் அமேசானின் மழைக் காடு களைவிட இரண்டு மடங்கு பெரிய வையாகும்.
அமேசான் காடுகளைப் போலவே, இவையும் உலகின் சுற்றுச்சூழலையும் சீதோஷ் ணத்தையும் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பற்பல பறவை யினங்கள் இங்கே குடியிருக்கின்றன.
தன் துணையைக் கண்டுபிடிக்க ஒய்யார மாய் நடனமாடி, பாட்டி சைக்கும் கேபர்கேலி என்ற ஒருவகை காட்டுக் கோழியும் இங்குள்ளது.
பக்கம் 17-ல் காட்டப் பட்டுள்ள அழகான பைகால் குள்ள வாத்தும் அடிக்கடி ஏரிக்கு வந்து போகிறது. இங்கு காணப்படும் மிருகங்களில், கருநிற உரோம முடைய பார்கஸீன் சேபல் என்ற பாலூட்டி குறிப்பிடத் தக்கதாகும்.
ஒரு காலத்தில் இவற்றின் பளபளப்பான உரோமத்திற்காக, இரக்கமின்றி இவை ஏராளமாய் வேட்டையாடப் பட்டன. இப்பொழுது, இயற்கைவள ஆர்வலர்களின் முயற்சியால் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த அழகிய பிராணியைப் பாதுகாக்கும் முயற்சியில், பார்கஸீன் இயற்கைவள பாதுகாப்பு நிறுவனம் பைகால் ஏரிக்கரைகளில் 1916-ல் உருவாக்க ப்பட்டது.
தற்போது, மூன்று தேசிய பூங்காக்களோடு ஏரியின் எல்லைகளில் அமைந் துள்ள மூன்று இயற்கைவள பாதுகாப்பு மையங்கள் பொது மக்கள் சென்று பார்ப்பதற்கு அனு மதிக்கப் பட்டுள்ளன.