அமெரிக்கா பல்கலைக்கழங்களில் பயில்வதற்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களுக்கு போலி விசா பெற உதவிய, 10 இந்தியர்கள் உட்பட 21 பேரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள், பல்கலைக் கழகத்தில் விசா பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான நடைமுறைகள் கடுமையாக உள்ள நிலையில், அதனைப் பெற்றுத் தருவதாக கூறி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள்
மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகி யுள்ளது.
நியூஜெர்சியில் உள்ள போலியான பல்கலைகழகத்தின் மூலமாக மாணவர் விசா பெற்றுத் தந்த இவர்களை, அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நியூஜெர்சியில் உள்ள போலியான பல்கலைகழகத்தின் மூலமாக மாணவர் விசா பெற்றுத் தந்த இவர்களை, அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பல்கலைகழகத்தின் சார்பில் விசா பெறுவதற்கான நடைமுறைகளில் உள்ள நம்பகத்தன்மையை அறிய அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள்
நடத்திய மாதிரி ஆய்வில், போலி ஆவணங்கள் மற்றும் தகவல்கள் மூலம் விசா பெற்றுத் தர முயற்சி நடைபெற்றது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
போலி பல்கலைக்கழகம் மூலம் விசா பெற்ற நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களை கண்டறிந்து, அவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையும் விரைவில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையால் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதால், அமெரிக்க தூதரகம் இந்த விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும் எனவும்,
வேறு கல்லூரிகள் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசா கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.