முதல்வர் ஜெயலலிதா பிரசார பொதுக் கூட்டத்தில் 5 பேர் பலியாகி யுள்ளது தொடர்பாக தேவைப் பட்டால் பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று
அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அலுவல கத்தை அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்
நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் பா.ம.க. அலை வீசி வருகிறது. எங்களுக்கு மிக பெரிய வெற்றி வர இருக்கிறது.
நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் பா.ம.க. அலை வீசி வருகிறது. எங்களுக்கு மிக பெரிய வெற்றி வர இருக்கிறது.
அன்பு மணியால் மட்டும் தான் பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியும். அன்புமணி ராமதாஸ் முதல்வராக வந்தால், நல்ல தேவையான திட்டங்களை செயல் படுத்துவார் என்று பொது மக்கள் கருதுகிறார்கள்.
தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில இருந்த தி.மு.க., அ.தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டனர்.
பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும், மது ஒழிப்புக்கு முதல் கையெழுத்து போடுவேன் என்று சொன்னேன்.
அது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மது விலக்கு பற்றி 5 ஆண்டு காலமாக பேசாத ஜெயலலிதா தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறி வருகிறார்.
அது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மது விலக்கு பற்றி 5 ஆண்டு காலமாக பேசாத ஜெயலலிதா தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறி வருகிறார்.
ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் இது வரை 5 பேர் இறந் துள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை கழகத்திற்கும்,
தமிழக தேர்தல் ஆணையத் திடமும் புகார் தெரிவித்துள்ளோம். தேவைப் பட்டால் 5 பேர் உயிரிழந்ததற்கு பா.ம.க. சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அன்புமணி தெரிவித்தார்.