சீனாவில் கட்டிடங்களுக்கும் அரசு விதிக்கும் கட்டுப்பாடு !

வான் முட்டும் கட்டிடங்களுக்கு பேர் போனது நவீன சீனா. வித்தியாசமான வடிவங்களில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கட்டிடங்கள் பல நாடெங்கும் ஜொலிக்கின்றன. 
சீனாவில் கட்டிடங்களுக்கும் அரசு விதிக்கும் கட்டுப்பாடு !
மிகப்பெரிய டோனட் வடிவ கட்டிடம், நீளமான காற்சட்டை வடிவிலான கோபுரம், ஸ்டார் வார்ஸ் திரைப் படங்களில் வரும் விண்ணோடங்களின் மாதிரி வடிவ கட்டிடத் தொகுதி என சமீப காலமாக சீனாவில் வித்தியா சமான பிரம்மாண்ட கட்டிடங்கள் நகரங்களில் ஏராளமாக எழுந்துள்ளன.

ஆனால் இதெல்லாம் சீன அதிபர் ஷீஜின் பிங்குக்குப் பிடிக்க வில்லை. இத்தகைய கட்டிடங்கள் குறித்து அவர் ஓராண் டுக்கு முன்னரே கவலை வெளியிட்டிருந்தார். தற்போது அரசு உத்தரவே பிறப்பித்து விட்டது. 

சீனாவில் கட்டப்படும் எதிர்கால புதிய கட்டிடங்கள் தேவையற்ற அளவுக்கு பிரம்மாண்ட மானதாகவோ சீன கலாச்சாரத்துக்கு முரணாகவோ இருக்கக் கூடாது என்கிறது சீன அரசின் புதிய விதி.
இந்த புதிய விதிக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஏறக் குறைய சம அளவில் இருக்கிறது. சீனாவில் வளர்ந்து வரும் நவீன கட்டிடக் கலையை அரசாங்கம் கட்டுப்ப டுத்தவோ, தடுக்கவோ கூடாது என்கிறார்கள். 

வித்தியாசமான கட்டிடங்களை ஆதரிக்கும் இளம் தலை முறையைச் சேர்ந்த நகர்ப்புறத்து வாசிகள். ஆனால் சீன பாரம்பரியத்தை ஆதரிப்ப வர்களின் கருத்து வேறு மாதிரி இருக்கிறது. 

சீனாவின் வித்தியாசமான பிரம்மாண்ட கட்டிடங்களை வடிவமைத்தவர்கள் எல்லோருமே வெளிநாட்டு நிபுணர்கள் என்பதால், எதிர் காலத்தில் சீனாவின் உள்ளூர் கட்டிடக்கலை நிபுணர்கள் உருவாகும் போது
சீனாவில் கட்டிடங்களுக்கும் அரசு விதிக்கும் கட்டுப்பாடு !
சீனக்கலை யம்சங்கள் கொண்ட கட்டிடங்கள் உருவாகும் என்று இவர்கள் நம்புகிறார்கள். சீனாவின் புதிய விதிகளுக்கு உள்ளூராட்சி அதிகாரிகள் விளக்க மளிக்க முடியும். 

எனவே ஓரளவு வித்தியாசங்களை அவர்கள் அனுமதிக்க வழி யுண்டு. ஆனால் டோனட் வடிவ கட்டிடங்க ளெல்லாம் இனிமேல் சீனாவில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
Tags:
Privacy and cookie settings