சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ரூ.118 கோடியே 59 லட்சம் ரூபாய் சொத்து உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவின்படி, கையிருப்பு ரொக்கமாக 41 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அசையா சொத்துக்களின் மதிப்பு 41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 ரூபாய் என்றும்,
சுயமாக வாங்கிய அசையா சொத்து மதிப்பு 18 லட்சத்து 63 ஆயிரத்து 300 ரூபாய் என்றும் ஜெயலலிதா தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அசையா சொத்துகளை வாங்கிய பின்னர், அவற்றின் மேம்பாட்டு மற்றும் கட்டுமான செலவு சேர்த்து 4 கோடியே 66 லட்சத்து 73 ஆயிரத்து 190 ரூபாய் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
சுயமாக வாங்கிய சொத்துக்களின் மதிப்பு 72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 ரூபாய் என்றும், மொத்த சொத்துமதிப்பு 118 கோடியே 59 லட்சம் ரூபாய் என்றும் ஜெயலலிதா தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு கோடியே 4 லட்சத்து இரண்டாயிரத்து 987 ரூபாய் கடன் உள்ளதாகவும் ஜெயலலிதா வேட்புமனுவில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சொத்து விவரம்
கையிருப்பு ரொக்கம் ரூ.41,000
அசையும் சொத்துகள் ரூ.41,63,55,395
சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.18,63,300
அசையா சொத்துகளில் மதிப்பு ரூ.4,66,73,190
சுயமாக வாங்கி சொத்து மதிப் பு ரூ.72,09,83,190
மொத்த சொத்து மதிப்பு ரூ.118,59,160,75
கடன் பொறுப்புகள் ரூ.2,04,02,987