காய்கறி, பழங்களை விட அதிக சத்து உள்ள பாப்கார்ன் !

காய்கறி, பழங்களை காட்டிலும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர். மேலும் இதை சத்து நிறைந்த சீர்படுத் தப்படாத தங்கம் என வர்ணக் கின்றனர். 
பழங்களை விட அதிக சத்து


பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், தானியங் களில் காணப்படும் சத்துக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தினர். 

இந்த ஆராய்ச்சியில் மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று தெரிய வந்துள்ளது. 

மேலும் உப்பு, எண்ணெய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப் படாமல் தயாரிக் கப்படும் பாப்கார்ன், காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது என்றும் தெரிய வந்துள்ளது. 

மற்ற தானிய ங்களில் உள்ளதை விட மக்காச் சோளத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்து அடங்கி இருப்பதால் உடல் நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞா னிகள் தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings