உங்கள் Smart Phone-ன் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி ?

தொழிநுட்ப வளர்ச்சியானது இன்று மனிதனை வென்றுள்ள காலகட்டத்தில் அனைவருமே இணையத்தை தங்களது ஸ்மார்ட் போன் மூலம் தான் பாவிக்கிறார்கள். 
இவ்வாறு ஸ்மார்ட் போன் மூலம் இணையத்தை அணுகும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான் இணைய வேகம்.

ஒரு சில ஸ்மார்ட் போன்களில் இணையம் உபயோகிக்கும் போது வேகத்தை பெற்று கொள்ள முடியுமானதாக இருந்தாலும், பல ஸ்மார்ட் போன்களில் நாம் இணையத்தை உபயோகிக்கும் போது மந்தமாக செயற்படுவதை அவதானிக்க கூடியதாய் இருக்கும்.

இவ்வாறு இணையம் மந்தமாக செயற்படும் போது நாம் WiFi இணைப்புக்களை தேடிச்செல்வோம். ஆனால் சில சமயம் WiFi இணைப்புக்கள் கூட மிக மெதுவாகவே எமது ஸ்மார்ட் போனில் இணைய இணைப்பை வழங்கும்.

எதுவித Software-ம் இன்றி Internet வேகத்தை கிட்டத்தட்ட 30%-ற்கும் மேல் அதிகரிப்பது எப்படி?

இதானால் இன்றைய பதிவில் உங்களது ஸ்மார்ட் போன் WiFi இணைப்புக்களும் இணைந்து இருக்கும் பட்சத்தில் எவ்வாறு இணைய வேகத்தை அதிகரித்து கொள்வது என்று கூறுகிறேன்.
உங்களது ஸ்மார்ட் போன் WiFi இணைப்பு ஒன்றுடன் இணைந்து இருக்கும் போது சாதாரண DNS-கு பதிலாக Google-லின் மிக வேகமாக இயங்க கூடிய DNS-ஐ உபயோகிக்கும் பட்ச்சத்தில் உங்களது இணைய வேகமானது இன்னும் அதிகரிக்கப்படும்.

நீங்கள் குறிப்பிட்ட ஒரு WiFi நெட்வொர்க் உடன் இணையும் போது, உங்களது ஸ்மார்ட் போன் ஆனது, அந்த குறிப்பிட்ட WiFi நெட்வொர்க் உடைய DNS-ஐயே பெற்றுக்கொள்ளும். 
ஆனால் இதை நீங்கள் மாற்றி, Google-இன் அதிவேக DNS-ஐ உபயோகிக்கும் போது உங்கள் இணைய வேகமானது எந்தவிதமான மென்பொருளும் இல்லாமல் வேகமாக்கப்படும்.

இதை எவ்வாறு செய்வது 

உங்களது ஸ்மார்ட் போனை எடுத்து குறிப்பிட்ட WiFi நெட்வொர்க் உடன் இணைந்து கொள்ள அதற்கு தேவையான Password-ஐ வழங்குங்கள். Password-ஐ வழங்கிய பின்னர், Show Advanced Option என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே IP Settings என்பதை கிளிக் செய்து அதிலே Static என்பதை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து IP Address என்று காட்டப்பட்டு இருக்கும் இடத்தில் மறைந்து காணப்படும் அதே IP முகவரியை டைப் செய்யுங்கள்.

அடுத்ததாக DNS1, DNS2 என்று இருக்கும் இடத்தில் முறையே கீழே நான் குறிப்பிட்டு காட்டியிள்ளவாறு டைப் செய்து Connect என்பதை கிளிக் செய்யுங்கள்.

8.8.8.8 
8.8.4.4
அவ்வளவு தான். இப்போது நீங்கள் வெற்றிகரமாக உங்களது WiFi இணைப்பின் DNS முகவரியை மாற்றி விட்டீர்கள். இப்போது இணையத்தை உபயோகித்து பார்த்தால் தெரியும், உங்களது இணைய வேகமானது முன்னரிலும் பார்க்க அதிகமாக இருப்பது உங்களுக்கே புரியும்.

குறிப்பு

இந்த முறையானது உங்களது ஸ்மார்ட் போனின் இணைய வேகத்தில் அபார மாற்றத்தை தரா விட்டாலும், கண்டிப்பாக முன்னர் இருந்ததிலும் பார்க்க வேகமான இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.
Tags:
Privacy and cookie settings