கபாலி படத்தினை டப் செய்ய 200 பேர் தேர்வு !

ரஜினி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கபாலி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 
கபாலி படத்தினை டப் செய்ய 200 பேர் தேர்வு !
ரஜினி படங்கள் பெரும்பாலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவரும். தற்போது முதன் முறையாக மலாய் மொழியில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளி வரவிருக்கிறது.

இதுவரை எந்த தமிழ் படமும் டப் செய்யப்படாத மலாய் மொழியில் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் அவரது குரலுக்காக 200 பேர் வரை குரல் தேர்வு நடத்தி யுள்ளனர். 

மலாய் மொழியில் உருவாகும் ‘கபாலி’ படத்துக்கான டீசர் ஒன்றையும் உருவாக்க திட்ட மிட்டுள்ளனர். 

கிட்டத்தட்ட 15 நாட்களாக நடந்த இந்த குரல் தேர்வில் ரஜினியின் கபாலிடா என்ற வசனத்தை ரஜினியின் குரலுக்கு ஏற்றார்போல் பேசுவதற்கு பலரும் முயற்சி செய்தனர். 

கடைசியில், மலாய் மொழியில் ரஜினிக்கு குரல் கொடுக்க அருண் என்பவர் தேர்வாகி யிருக்கிறார். அருண், சிறு வயதிலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகர். 
ரஜினியின் குரலுக்கு அருணின் குரல் கச்சிதமாக பொருந்தவே அவரை தேர்வு செய்துள்ளனர். இவர் மலாய் மொழியில் டப்பிங் பேசிய பிறகு, அதன் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

‘கபாலி’ படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்குகிறார். 

தன்ஷிகா, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings