ஹைதராபாத் வந்த உலகின் மிகப்பெரிய விமானம் AN 225 !

ஹைதராபாத்தில் தரை யிறங்கிய உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஏஎன்225 மிரியா இந்திய மீடியாக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து விட்டது. 


இந்த விமானம் பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டத்தையும், வியப்பையும் தருவதாக இருக்கிறது.

ஐரோப்பாவில் இருந்து மின்சார ஜெனரேட்டரை ஏற்றிக் கொண்டு ஆஸ்திரேலியா வுக்கு செல்லும் வழியில், இந்த விமானம் ஹைதராபா த்தில் தரை யிறங்கியது. 

இந்த நிலைியல், இந்த விமானத்தை பற்றி தெரியாத சில சுவாரஸ்யத் தகவல்களை.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380ஐ விட இந்த விமானம் பெரியது.

ஏர்பஸ் ஏ380 பயணிகள் விமானம் பயணிகள், சரக்கு என இரண்டையும் சேர்த்து 157 டன் எடையை சுமந்து செல்லும் 

அல்லது ஏற்ற முடியும். ஆனால், இந்த சரக்கு விமானம் 253 டன் சரக்குடன் மேலே எழும்பும் திறன் கொண்டது.


கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கான வடிவத்தை பெற்றது.

அதாவது, கால்பந்து மைதானத்தை விட 10 அடி மட்டுமே குறைவாக இருக்கும்.

இந்த விமானத்தில் 52 யானைகளுக்கு இணையான எடையை ஏற்ற முடியும்.

காக்பிட், பணியாளர்கள் அறை தவிர்த்து சரக்கு ஏற்றும் இடம் மட்டும் 43.32 மீட்டர் நீளமும், 6.4 மீட்டர் அகலமும், 4.4 மீட்டர் உயரமும் கொண்டது.

எனவே, மிக பிரம்மாண்டமான வடிவம் கொண்ட சரக்குகளை கூட அசால்ட்டாக ஏற்ற முடியும்.

இந்த விமானம் மணிக்கு 850 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 15,300 கிமீ தூரம் பறக்கும்.

ஆனால், சரக்கு எடைக்கு தகுந்தவாறு பறக்கும் தூரம் குறையும். 


தற்போது 116 டன் எடையுடைய ஜெனரேட்டரை ஏற்றி வந்தால், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 4,000 கிமீ தூரம் மட்டுமே பறக்கும்.

இந்த விமானத்தை இயக்குவதற்கு பைலட்டுகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என 6 பேர் தேவை.

அது தவிர, விமானத்தில் மொத்தமாக 20 பேர் பணிபுரிகின்றனர். 

ஹைதராபாத் வந்தபோது 20 விமான பணியாளர்கள் மற்றும் சரக்கை கண்காணிக்கும் பொறுப்பில் 6 பணியாளர்கள் என மொத்தம் 26 பேர் வந்திருந்தனர்.

25 ஆண்டு களுக்கும் மேலாக செயல்பாட்டில் இருக்கும் இந்த விமானம் இதுவரை 240 சாதனைகளை படைத்துள்ளது.

அதில், 186.7 டன் எடையுடையே ஒற்றை சரக்கை ஏற்றிச் சென்றதுடன், 42.1 மீட்டர் நீளமுடைய சரக்கையும் ஏற்றிச் சென்று பல உலக சாதனைகளை படைத்திருக்கிறது.


இந்த விமானத்திற்கான வாடகை மிக அதிகம். 2004ம் ஆண்டு டென்மார்க் நாட்டி லிருந்து கஜகஸ்தான் நாட்டிற்கு செல்வதற்கு 3 லட்சம் டாலர் வாடகை வசூலிக்கப் பட்டது.

இப்போது எவ்வளவு மடங்கு அதிகரி த்திருக்கும் என்பதே தலை சுற்ற வைக்கும் செய்தி தான்.

பொதுவாக சரக்கு விமானங்களில் பின்புறம் தான் வழி மற்றும் சரக்கு ஏற்றுவதற் கான மேடை உள்ளிட்ட வற்றை அமைக்கப் பட்டிருக்கும்.

ஆனால், இந்த விமானத்தின் முன்பகுதி வழியாகத் தான் சரக்குகள் ஏற்றப்படு கிறது.

அதாவது, காக்பிட் அமைந்திருக்கும் மூக்குப் பகுதியை மேலே தூக்கிக் கொள்ளும்.

இதனால், பின்புற கதவு, மேடைகள் போன்ற வற்றின் எடை வெகுவாக குறைந்தி ருக்கிறது.

கடந்த 1988ம் ஆண்டு முதல் முறையாக பறந்தது இந்த விமானம்.

ரஷ்ய விண்வெளி ஓடத்தை தரையிறங்கிய இடத்தி லிருந்து ஏவக்கூடிய இடத்திற்கு சுமந்து செல்வதற் காகவே வடிவமைக்கப் பட்டது. 
பின்னர், வர்த்தக ரீதியில் இயக்கப்பட்டு வருகிறது. 1989ம் ஆண்டு முதுகில் புரான் விண்வெளி ஓடத்துடன் பாரிஸ் ஏர் ஷோவிற்கு வருகை தந்திருந்தது.

வான்வழியாக எடுத்துச் செல்லவே முடியாது என்று கருதும் பிரம்மாண்ட பொருட்களை கூட எளிதாக எடுத்துச் சென்று சேவையாற்றி வருகிறது.

6 எஞ்சின்கள், 32 சக்கரங்கள் என பிரம்மாண்ட இறக்கைகள், வால் பகுதி என வியக்க வைக்கும் இந்த விமானத்தில் போயிங் 737 விமானத்தையே அடக்கி விட முடியுமாம்

இந்தியாவில் நடுத்தர வகை விமானங்களை தயாரிப்பதற் காக, அனில் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன த்துடன், 


இந்த விமானத்தை தயாரித்த உக்ரைன் நாட்டின் அன்டோனிக் நிறுவனம் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதன் மூலமாக, பொது சந்தை மற்றும் ராணுவ பயன் பாட்டிற்கான விமானங் களை

ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் ஒத்துழைப்புடன் தயாரிக்க முடிவு செய்யப் பட்டிருக்கிறது.
Tags:
Privacy and cookie settings