பி.இ.2-ம் ஆண்டில் சேர ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் !

நடப்புக் கல்வியாண்டில் (2016-17) அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர 
ஜூன் 10-ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க லாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. 


இது குறித்து தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் சோ.மதுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள், நிகழ் கல்வியாண்டில் அரசு,

அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர ஜூன் 10-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க லாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர் தேவையான சான்றுகளுடன் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பித்த பிரதியை, உரிய ஆவணங்கள், பதிவுக் கட்டணத்துடன் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரிகள் பின்வருமாறு:






கட்டணம் செலுத்தும் முறை:

விண்ணப்பதாரர் ரூ.300-க்கான வரைவோலையை, ""The Secretary, Second Year B.E B.Tech. Degree Admissions-2016,

ACCET, Karaikudi-'' payable at karaikudi என்ற பெயரில் பெற்று பதிவுக்கட்டணமாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர் களுக்கு விண்ணப்பங்கள் இலவசம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 

பதிவுக் கட்டணத்துடன், ""செயலர், நேரடி இரண்டாமாண்டு பி.இ, பி.டெக் சேர்க்கை 2016,


அழகப்பா செட்டியார் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, காரைக்குடி-630004'' என்ற முகவரிக்கு, 

ஜூன் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணைய தளங்களைப் பார்வை யிடலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings