சாலைகளில் 'ஸ்பீடு பிரேக்கர்'களுக்கு பதிலாக 3D வரைபடம்...!

ஒரு ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துக்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. இதில் 1.5 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். 
இந்நிலையில், வெளிநாடுகளில் இருப்பதை போன்ற சாலைகளில் முப்பரிமாண வேகத்தடுப்பு வரைபடங்களை தத்ரூபமாக வரைந்து விபத்துக்களை தடுக்கும் புதிய யோசனையை மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

14 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இவை வந்துவிட்டது என்றாலும் தற்போது இந்தியாவில் இதை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கட்கரியின் இந்த யோசனை சமூக வலைத்தளங்களில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பெரிய நெடுஞ்சாலைகள், வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சாலைகளில் 

இதுபோன்ற முப்பரிமாண ஸ்பீடு பிரேக்கர்களை வரைந்து விட்டால் தேவையில்லாமல் வேகத்தடுப்புகளை அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

வேகமாக செல்லும் வாகனங்கள் தூரத்தில் இருந்தே இந்த வரைபடத்தை பார்க்க முடிவதால் ஸ்பீடு பிரேக்கர்களால் ஏற்படும் விபத்துகளும் குறையும்.
Tags:
Privacy and cookie settings