பிளஸ் 2 முடிவுகள் வருவதில் தாமதம் | Plus 2 results delayed !

0 minute read
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 17ஆம் தேதி வெளியாக இருப்பதால் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைக்கப் பட்டுள்ள தாக மருத்துவ கல்வி இயக்கம் அறிவித் துள்ளது. 


தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவற்றில் மாணவர்களை சேர்க்க விண்ணப்ப படிவங்கள் மே 9 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் 

என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தள்ளிப் போகிறது.

வழக்கமாக மே முதல் வாரத்தில் வெளியாகும் பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் இந்த ஆண்டு மே 17ஆம் தேதி வெளி யாகிறது. 

எனவே மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைக்கப் பட்டுள்ள தாக தெரிவிக்கப் படுகிறது. விண்ணப்ப விநியோகத் துக்கான புதிய தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings