ப்ளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியரில் காஞ்சிபுரம் மாணவி சரண்யா 1,200-க்கு 1,179 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரை ப்ளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
இதில் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவி ஆர்த்தி மற்றும் அதே பள்ளியை சேர்ந்த மாணவன் ஜஸ்வந்த் 1,200க்கு 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவ, மாணவியரில் காஞ்சிபுரம் மாணவி சரண்யா 1, 200க்கு 1,179 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கோவை மாணவி சத்யா 1,178 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி அனு 1,177 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.