குழந்தைகளுக்கு 20 லட்ச ரூபாய் நன்கொடை... அப்ரிடி !

1 minute read
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி மன நலம் குன்றிய குழந்தைகளுக்கு 20 லட்ச ரூபாய் பணத்தினை நிதியுதவியாக அளித்துள்ளார்.
 குழந்தைகளுக்கு 20 லட்ச ரூபாய் நன்கொடை... அப்ரிடி !
பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான சாதனையாளர் அப்ரிடி பல நல்ல காரியங்களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறார். 

கிராமங்களுக்கு சாலை போடுவது, புற்றுநோய் மருத்துவமனை கட்டுவது போன்ற அறப்பணிகளில் அப்ரிடி ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், கராச்சி நகரில் செயல்பட்டு வரும் உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான தாருல் சுகான் என்ற அமைப்புக்கு நேற்று அப்ரிடி சென்றார்.

அங்கு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்ட அப்ரிடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் பேசியும் மகிழ்ந்தார். பின்னர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்காக 20 லட்சம் பாகிஸ்தான் பணத்தையும் நிதியுதவியாக அப்ரிடி அளித்தார்.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings