இன்று விதவிதமான ஆங்கில வேதாகமங்களைப் பார்க்கிறோம். இது பலரின் இரத்தத்தில் உருவாகி வந்தது தான் இந்த மொழியாக்கம். சீர்திருத்த்த்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுவபர் ஜான் விக்ளிஃப்
இவர் மார்டின் லூதர் கிங் அவர்களுக்கு முந்தினவர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியரான இவர் ஒவ்வொரு மனிதனும் தன் தாய் மொழியில் பைபிளை வாசிக்க வேண்டும் என வாஞ்சையுள்ளவர்,
அதோடு மட்டுமல்ல லத்தீன் மொழி பெயர்ப்பான வால்கேட்டிலிருந்து ஆங்கிலத்திற்கு பைபிளை மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.
அப்போதெல்லாம் அச்சடிக்கும் முறை கிடையாது ஆகவே கையெழுத்துப் பிரதியாகவே வெளியிட முயன்றார், ஆனால் அதற்கு முன்னதாகவே மரித்துப் போனார்.
இதற்குப்பின்பு அவரது நன்பர்கள் ஒருசில திருத்தங்களுடன் அந்த மொழி யாக்கத்தை வெளியிட்டனர்.
இதுவே ஆங்கிலத்தில் வந்த முதல் வேதாகமம் ஆனால் அச்சுவடிவில் வெளி வர வில்லை. இந்த வேதாகமங்களில் நூற்று க்கும் மேற்பட்டவைகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்டதற்காக ஜான் விக்ளிஃப் அவர்களுக்கு இறந்த பிறகு தண்டனை வழங்கப்பட்டது, என்ன வினோதமாக இருக்கிறதா?
ஆம் இறந்து 17 ஆண்டுகளுக்கு அவரது கல்லறை தோண்டப்பட்டு பாராளு மன்ற உத்தரவுப்படி தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது. ஆனால் இது போன்ற அச்சுறுத்தல்கள் மொழியாக்கப் பணிகளை சிறிதும் பாதிக்கவில்லை.
டிண்டேல் வேதாகமம் (1525) (இதுவே முதன் முதலில் அச்சுவடிவில் வெளி வந்த அச்சு வடிவ வேதாகமம்) 1525 ஆம் ஆண்டு புதிய ஏற்பாடும் அதைத் தொடர்ந்து 1536ஆம் ஆண்டு மற்ற சில புத்தகங்களும் வெளிவந்தன,
ஆனால் இந்த மொழிபெயர்ப்புக்காக 1536 ஆம் ஆண்டு அக்டோபர் 6ல் எட்டாம் ஹென்றியின் ஆனைப்படி டிண்டேலை கம்பத்தில் கட்டி வைத்து உயிரோடு தீயிட்டுக் கொளுத்தினார்கள்,
“கர்த்தாவே இங்கிலாந்து மன்னின் கண்களைத் திறந்தருளும்” என்று வீர முழக்கமிட்டு அவர் தீக்கிரையானார்,
இதன் பின்னர் டிண்டேலின் நண்பர் கவெர்டேல் என்பவர் மற்ற புத்தகங்க ளையும் அச்சிட்டு மற்றொரு பதிப்பை வெளியிட்டார் இதுவே ஆங்கிலத்தில் வந்த முழு அச்சிடப்பட்ட பைபிள்.
தற்போது இந்த கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் உலகின் 500-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது.
அப்படி ஆங்கிலத்தி ல் 1526-ம் ஆண்டு முதல் முதலாக அச்சிட்டு வெளியானது தான், வில்லியம் டின்டேல் மொழி பெயர்ப்பு பைபிள்.
அந்த பைபிளில் இருந்து புதிய ஏற்பாடு, 1537-ல் அச்சிடப்பட்டுள்ளது. அந்த அபூர்வ புதிய ஏற்பாட்டில் ஒன்று, விரைவில் லண்டன் சோத்பை நிறுவனத் தில் ஏலத்துக்கு வருகிறது.
இதை கேம்பிரிட்ஜ் நிறுவனத்தின் தற்போதைய அதிபர், 1960-களில் ஒரு பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, 25 ஷில்லிங்கிற்கு வாங்கி உள்ளார்.
இந்த புதிய ஏற்பாடு தற்போது 35 ஆயிரம் பவுண்டிற்கு (சுமார் ரூ.35 லட்சம்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப் படுகிறது.