மக்காவையும் மதீனாவையும் ஜித்தா வழியாக இணைக்கும் ரயில் பாதை விரைவில் !

இறைவன் நாடினால் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கும் புனித நகரங்களான "மக்கா அல் முக்கரம்மாவையும்" "மதீனா அல் முனவ்வராவையும்" 
ஜித்தா மாநகரம் வழியாக இணைக்கவிருக்கும் ஹரமைன் அதிவிரைவு இரயிலின் திட்ட மாதுரியை விளக்கும் கண்ணொளி இது..

இதன் சிறப்புகளை வரிசையாக பார்போம் :

1. இந்த அதிவேக இரயில் மணிக்கு 360 kmp/h வேகத்தில் இயங்கும் அதாவது ஜித்தா மத்திய இரயில் நிலையத்தில் இருந்து மக்கா ஹரமைன் இரயில் நிலையத்திற்கு வெறும் 26 நிமிடங்களில் வந்து சேரலாம். ‪

2. மதீனா இரயில் நிலையத்தில் இருந்து மக்கா ஹரமைன் இரயில் நிலையத்திற்கு வெறும் 2 மணி நேரங்களில் அடையலாம் அதாவது மதீனாவில் நோன்பு திறந்து இரவு தொழுகையை ஹரமில் தொழலாம் ‪#‎மாஷாஅல்லாஹ்‬..

3. இந்த முழு தடத்தில் சிறிய மற்றும் பெரிய , ஓட்டகம் கடந்து செல்ல (Camel crossings) என மொத்தம் 136 பாலங்கள் அமைக்க பட உள்ளன.

4. மேலும் இந்த திட்டம் மன்னர் அப்துல்லாஹ் பொருளாதார நகரம் (King Abdullah Economic City) மற்றும் ஜித்தா மன்னர் அப்துல் அஜிஸ் பன்னாட்டு விமானநிலையத்தில் உள்ள ஹாஜி டெர்மினலயும் ( KAIA - HAJI Terminal) இணைக்கும் வகையில் செயல்படும் .

5. Saudi binladen groups, Al-Rajhi Alliance , Saudi Oger Limited ,Saudi-Japanese Consortium, Azmeel Alliance + China Railway No 17, Nesma and Partners Contracting Co., Al Arrab Alliance, Al Yamama Trading & Contracting Company., Al Mabani General Contractors ஆகிய இந்த நிறுவனங்கள் இந்த முழு திட்டத்தை செயல்படுத்துகின்றன ..

6.இதில் மக்கா மற்றும் மதீனா இரயில் நிலையங்களை Saudi Binladen groups நிறுவனமும் ஜித்தா மாநகரம் மற்றும் மன்னர் அப்துல்லாஹ் பொருளாதார நகரம் இரயில் நிலையங்களை Saudi Oger நிறுவனமும் கட்ட திட்டமிட்டுள்ளன மொத்த இரயில்நிலைய கட்டமைப்புக்கு மட்டும் SAR 142 million ரியால்கள் செலவு ஒதுக்கப்பட்டுள்ளது..
7. இந்த தடத்தில் மிக பெரிய சவால் கரடு ,முரடாக உயர்ந்து மேலோங்கி நிற்கும் மலைகளை குடைந்தும் , பாலைவன மணற் குன்றுகளை கடந்து பாதுகாப்பான அதிவேக தண்டவாளங்களை அமைப்பதுதான்..
Tags:
Privacy and cookie settings