உலகில் உள்ள அருவெறுக்கத்தக்க வேலை !

செய்யும் தொழிலே தெய்வம்' என்பதற்கேற்ப பலர் தங்களது வேலையை மிகவும் ரசித்து செய்வார்கள். 


அது நம்மைப் பார்ப்பவர்கள் மோசமாக நினைக்கக் கூடியதாக இருந்தாலும், தன் தொழிலை சற்றும் தயங்காமல் செய்வார்கள்.

நீங்கள் உங்கள் வேலை திருப்தி யற்றதாக நினைக்கிறீர் களா? அப்படி யெனில் உலகில் அருவெறுக்கக் கூடிய வகையில் உள்ள

சில வேலைகளைப் பற்றி தெரிந்தால், உங்கள் வேலையை நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள். 

நம்மைப் பொறுத்த வரை மோசமான வேலையெனில் கழிவறை கழுவுவது, சாக்கடை சுத்தம் செய்வது போன்றவை தான்.

ஆனால் அதையும் தாண்டி சில மோசமான வேலைகள் உலகில் உள்ளது.அந்த வேலைகள்:

வாய்வு ஆய்வாளர்

இது ஒரு பைத்தியக் காரத்தனமான வேலை எனலாம். ஏனெனில் இந்த பணியில் நோயாளிகளின் குதவழியில் வெளிவரும் காற்றை சுவாசித்து,

எந்த மாதிரியான நோய் அவர்களுக்கு உள்ளது என சொல்வது. சற்று யோசித்துப் பாருங்கள், இந்த பணியில் உள்ளோரை...!

ஒராங்குட்டானின் கழிவை சேகரிப்பவர்

ஓராங்குட்டான் என்பது பெரிய வால் இல்லாக் குரங்கு வகையைச் சேர்ந்தது.

இந்த குரங்குகள் அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிப்பவைகள். இவைகள் இருக்கும் இடம் சுத்தமாக இருக்க, 


இந்த குரங்குகளின் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க பணியாளர்கள் நியமிக்கப் படுகின்றனர்.

எப்படி யெல்லாம் உலகில் வேலை உள்ளது என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

தடயவியல் பூச்சியியல் வல்லுநர்

இதுவும் ஓர் மோசமான வேலை தான். சற்று யோசித்துப் பாருங்கள், பல மாதங்களுக்கு முன் யாரோ ஒருவரை கொன்று புதைத்து,

அழுகி, புழுக்கள் உள்ள ஓர் சடலத்தை ஆராய்ந்து, அவர்களைப் பற்றி சொல்லச் சொன்னால் செய்வீர்களா? மிகவும் கடினம் தானே!
கழிவுத் தொட்டிகளை சுத்தம் செய்பவர்

உண்மை யிலேயே, இந்த வேலையை செய்பவர் களைப் பாராட்ட வேண்டும். நாம் நம் வீட்டில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யவே யோசிப்போம்.

ஆனால் இவர்கள் தங்களைப் பற்றி மற்றவர்கள் கேவலமாக நினைப்பார்கள் என்று சற்றும் தயங்காமல் பலரது வீட்டு கழிவுத் தொட்டிகளைச் சுத்தம் செய்கின்றனர்.


மலத்தை ஆராய்பவர்

இதுவும் ஓர் மோசமான ஓர் வேலை தான். ஆம், இந்த வேலையின் படி, யாரோ ஒருவரின் மலத்தை கையில் எடுத்து,

அதை ஆராய்ந்து அவர்களின் உடல்நல கோளாறைக் கூறுவது என்பது சாதாரணமான வேலை அல்ல.

இம்மாதிரி வேலை செய்பவர்கள் நாம் ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும்.
சாலையில் உள்ள சடலத்தை அப்புறப்படுத்துபவர்


சாலைகளில் விபத்தினால் இறந்த விலங்குகளை பலரும் வேடிக்கைப் பார்த்து விட்டு தான் செல்வோம். ஆனால் அதை அப்புறப்படுத்து வதற்கு என்று கட்டாயம் 
யாரேனும் ஒருவர் நியமிக்கப் பட்டிருப்பார்கள். இந்த மாதிரியான வேலையை யும் உலகில் உள்ள சில மக்கள் செய்து வருகின்றனர் என்பதை மறவாதீர்கள்.
Tags:
Privacy and cookie settings