செல்ஃபி எடுக்கும்போது மனைவியை தள்ளிக் கொன்ற வாலிபர் !

1 minute read
உத்தர பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் வரதட்சணை கொண்டு வராத கடுப்பில் செல்ஃபி எடுக்கும்போது மனைவியை கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளார். 
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சார்தனா பகுதியை சேர்ந்தவர் அப்தாப் (30). அவருக்கும் ஆயிஷா (24) என்ற பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் அப்தாப் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கால்வாய் பகுதிக்கு சென்று செல்ஃபி எடுத்துள்ளார். செல்ஃபி எடுத்தபோது அவர் தனது மனைவியை கால்வாயில் பிடித்து தள்ளிக் கொலை செய்துள்ளார்.

நேராக காவல் நிலையத்திற்கு சென்று 5 பேர் தன்னிடம் கொள்ளையடிக்க முயன்றதாகவும், தனது மனைவியை கால்வாயில் தள்ளி கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆயிஷாவின் உடலை தேடிக் கண்டுபிடித்தனர். 

அப்தாப் முன்னுக்கு பின் முரணமாக பேசியதால் சந்தேகப்பட்டு அவரிடம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்தாபை கைது செய்துள்ளனர். அப்தாப் மற்றும் அவரது அண்ணன் ஷெஹ்சாத் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings