ரகசியம் யாருக்கும் தெரியக் கூடாது !

1 minute read
சாணக்கியர் மனிதர்களுக்கு சொன்ன பல விஷயங்களில் முக்கிய மந்திர மாகக் கூறப்படுவது. 


உன்னுடைய மிக முக்கியமான ரகசிய ங்களை நீ யாருடனும் பகிர்ந்து கொள் ளாதே.

உன்னுடைய ரகசியத்தை உன்னால் பாதுகாக்க முடியாத போது, வேறு யாரால் பாதுகாக்க முடியும் என்பதை நினைத்துக் கொள் என்பதாகும்.

எனவே, நமக்கு முக்கியமான ரகசியங்களை நாமே பாதுகாக்காமல் நமது நண்பரிடம் கூறும் போது,

அவரும், அதனை அவரது நண்பரிடம் கூற மாட்டார் என்பதில் என்ன உறுதி இருக்கிறது.

எது யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைக்கி றோமோ அது யாருக்குமே தெரியப்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்வோம்.

சாணக்கியர் கூறிய மேலும் சில பொன் மொழிகள்.. மனிதனுக்குத் துணிச் சலைப் போல உலகில் உண்மை யான நண்பன் வேறு யாருமில்லை.

கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.


மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது. மிகவும் நேர்மையாக இருக்காதே. 

நேராக வளர்ந்த நெடிய மரங்கள் தான் முதலில் வெட்டுக்கு இறையாகும். நேர்மையா ளர்களும் அப்படித் தான் வெட்டப் படுவார்கள்.
Tags:
Privacy and cookie settings