தென் அமெரிக்க துணைக் ண்டத்தில் வாழ்ந்த பழங்குடியினர் களான மாயன்கள் குறித்து உலகெங்கிலும் ஒரு எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு.
மாயன்களின் காலண்டர்படி, 2012 - இல் உலகம் அழியும் என்று கூறப்பட்ட வதந்தி உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று...
மாயன்களின் புராதான நகரான 'மச்சுபிச்சு' உலகின் கவனம் கவரும் பகுதியாகவும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் நடமாட்டம் மட்டுமல்லாமல் ஒளியும் புக முடியாத அடர்ந்த காடுகளின் இடையே மாயன்களின் நகரம் இருந்த தற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
இதனை கண்டு பிடித்தது கனடாவை சேர்ந்த 15 வயதேயான பள்ளி மாணவன். வில்லியம் கேடோரி எனும் அந்த மாணவன் செயற்கைக்கோள் உதவியுடன் எடுக்கப் பட்ட படத்தினைக் கொண்டு வீட்டில் இருந்தவாறே
இந்த கண்டு பிடிப்பினை நிகழ்த்தி யுள்ளான். தென்கிழக்கு மெக்சிகோவின் அடர்ந்த யுகாடன் காடுகளின் செயற்கைக் கோள் வரைபடத்தை ஆராய்ந்த வில்லியம்,
அதன் இடையே சதுவ வடிவ கட்டுமானம் ஒன்று உள்ளதனை கண்டறிந்தான். இந்த கட்டுமானம் மனிதர்களால் உருவாக்கப் பட்டதாக இருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித் துள்ளனர்.
3 ஆண்டு அயராத உழைப்பின் பலனான தனது கண்டுபிடிப்பு குறித்து பிரெஞ்ச்-கனடிய இதழுக்கு பேட்டிய ளித்துள்ள வில்லியம் கேடோரி, "எல்லா பாரம்பரிய நாகரிகங் ளைப் போன்று
மாயன்கள் தங்களது நகரங்களை நதிகளை யொட்டி ஏன் அமைக்க வில்லை என்று நீண்ட காலமாக எனக்கு விளங்காமல் இருந்தது. இதற்கான காரணத்தை நான் ஒரு கருதுகோளாக உருவாக்கியுள்ளேன்.
மாயன்கள் நட்சத்திரத்தை வழிபட்டவர்களாக இருந்துள்ளனர்.
அவர்களது நகரங்கள் அனைத்தும் நாள்மீன் கூட்டத்துடன் (நட்சத்திரக் கூட்டம்) தொடர்புள்ளவையாக உள்ளதை எனது ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளேன்."
மாயன்களின் 22 நாள்மீன் கூட்டங்கள் குறித்து கூர்ந்து கற்றறிந்த வில்லியம், 117 மாயன்களின் நகரங்கள் அமைந்துள்ள இடங்கள்
நாள்மீன் கூட்டங்கள் அமைந்துள்ள இடங்களுடன் தொடர்பு படுத்தப்பட் டுள்ளதை கண்டறிந் துள்ளான்.
மாயன்களின் 23வது நாள்மீன் கூட்டமானது 3 நட்சத்திரங் களை உடையது, அதற்கு இணையான தாக வில்லியம் கருதிய இடத்தில்
இரு நகரங்கள் மட்டுமே இருந்ததால் மூன்றாவது நகரம் ஒன்று இருக்க வேண்டும் என்பதை ஊகித்தான்.
இதனை அடுத்து, 3வது நட்சத்திரம் அமைந்துள்ள திசைக்கு இணையான திசையில் காடுகளின் மையத்தில் செயற்கைக்கோள்
படத்தினை கொண்டு ஆராய்ந்த போது நகரம் போன்ற அமைப்பு உள்ளதனை மாணவன் வில்லியம் கண்டறிந்துள்ளான்.
சிறுவன் வில்லியம் தான் கண்டறிந்துள்ள மாயன் நகரத்திற்கு 'நெருப்பு வாய்' என பொருள்படும் வகையில் கே'ஆக் சீ' என பெயரிட்டுள்ளான்.
தனது கண்டுபிடிப்பு குறித்து 2017 இல் பிரேசிலில் நடைபெறவுள்ள சர்வதேச அறிவியல் கருத்தரங்கில் உரை நிகழ்த்த உள்ளான்.
வில்லியம் கேடோரி கண்டறிந் துள்ள அமைப்பு மனிதனால் கட்டப்பட்ட ஒன்றாக தான் இருக்க வேண்டுமென கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த டேனியல் டீ லிஸ்லே என்பவரும் கருத்து தெரிவித் துள்ளார்.
Tags: