திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று மலேசியா புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் உடன் சென்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக "நமக்கு நாமே" விடியல் மீட்பு பயணம் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.
பின்னர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் அந்த தொகுதியில் வெற்றிவாகையும் சூடினார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அத்தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், மு.க. ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு தனது குடும்பத்துடன் மலேசியா புறப்பட்டு சென்றார். அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கீர்த்திகா உதயநிதி, 2 பேர குழந்தைகள் ஆகியோர் ஸ்டாலினுடன் சென்றனர்.
தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காகவும், சொந்த பணிகளுக்காகவும் மலேசியா சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.