வாஸ்ட்ஆப்பில் வாட்ஸ்ஆப் கோல்டு அப்கிரேடு என்று ஏதாவது வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள்.
வாட்ஸ்ஆப் வந்துவிட்டதை அடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பும் பழக்கம் மலையேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்ஆப் கோல்டுக்கு அப்கிரேட் செய்கிறோம்
என்று கூறி மெசேஜ் மூலம் ஒரு லிங்க் வருகிறது. முன்பு எல்லாம் பிரபலங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் கோல்டு தற்போது அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.
இந்த அப்கிரேட் மூலம் இலவச அழைப்புகள், புதிய தீம்கள், புகைப்படங்களை பல்க்காக அனுப்பும் வசதி என ஏகப்பட்ட வசதிகள் உள்ளது என்று கூறுகிறார்கள்.
இதை நம்பி வாட்ஸ்ஆப் கோல்டை டவுன்லோடு செய்தால் அந்த ஆப்பில் உள்ள கோடு(code) உங்கள் போனை தாக்கி அதில் உள்ள தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எடுத்துக் கொள்கிறது.
முன்னதாக வாஸ்ட்ஆப் பிளஸ் என்ற பெயரில் ஏமாற்றினார்கள். தற்போது வாட்ஸ்ஆப் கோல்டு என்ற பெயரில் ஏமாற்றுகிறார்கள். உஷார் மக்களே உஷார்.