சேலத்தில் அதிமுக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரர், காவலர் ஒருவரை அமைச்சரின் வீட்டில் கட்டி வைத்து அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றன.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் எதிரே பழனிச்சாமி என்ற காவலர் வசித்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்துமாறு அமைச்சரின் அண்ணன் கோவிந்தனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன், அமைச்சரின் வீட்டின் தூணில் தம்மை கட்டி வைத்து அடித்ததாக காவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.