சொல்லாததையும் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.. ராமராஜன் !

0 minute read
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுமுன்தினம் நடிகர் ராமராஜன் பிரச்சாரம் செய்தார்.
பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் ஹைதர் அலிக்கு ஆதரவு கேட்டு சமாதானபுரம், மேலப்பாளையம் பகுதிகளில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சாதனை திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். 

கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறார். அரசின் இந்த திட்டப்பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளன. 

தற்போது மேலும் பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ளார். அத்தனை வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றுவார். 

அவரது சாதனை திட்டங்கள் தொடர அதிமுகவை ஆதரிக்க வேண்டும். 2 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறி தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றினார் என்றார் அவர்.
Tags:
Privacy and cookie settings