பூமிக்கு கீழே அமைந்துள்ள ஒரு நகரம்.. கூபர்பெடி !

மாணிக்கக் கல்லின் தலைநகரம் என அழைக்கப்படும் ‘கூபர் பெடி’ வடதெற்கு ஆஸ்திரேலியா வில் அடிலெய்டி லிருந்து 846 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. 


உலகின் மிகச்சிறந்த மாணிக்கக் கற்களை இங்கு தான் தோண்டி எடுக்கின்றனர்.

கூபர்பெடி பூமிக்கு கீழே அமைந்துள்ள ஒரு நகரம். இந்தப் பகுதியே ஒரு பாலைவனம் தான். 

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி கடலால் சூழப்பட்டி ருந்ததாம். 

பல நீண்ட குகைகள், மேடுகள், பள்ளங்களைக் கொண்ட பகுதி இது. இந்த பாலைவனப் பகுதியில் தோண்டத் தோண்ட மாணிக்கக் கற்கள் தான். 


1915இல் இந்த நகரம் உருவாக்கப் பட்டது. 2011-ஆம் ஆண்டின் கணக்குப்படி இதன் ஜனத்தொகை 1695.

இதில் அபார்ஜியன்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்திரேலியா வின் பழங்குடியினர் 275 பேர். 

இவர்கள் இந்த நகரத்திற்கு வைத்துள்ள பெயர் வெள்ளை மனிதர்களின் துவாரம். இதன் வடிவம் தான் கூபர்பெடி.


குகை போன்ற பகுதியில், ஒரு நகரமே அமைந்துள்ள தால், எப்போதும் இந்த இடத்தை சுற்றிப் பார்க்க

உல்லாச பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மாணிக்கக்கல் காட்சியகம், சர்ச்சுகள்,

வீடுகள், கடைகள், மாணிக்க வயல்கள் என எல்லாம் இங்கு உண்டு. பாலைவனத்தில் இந்தப்பகுதி அமைந்துள்ள தால் பாலைவன நாய்கள் இங்கு அதிகம்.

அவை ஆக்ரோஷமானவை. எனவே, நாய் தடுப்பு வேலி ஒன்றை அமைத்திருக் கிறார்கள்.

க்வீன்ஸ்லாந்தி லிருந்து கிரேட் ஆஸ்திரேலியா வின் இன்னொரு பகுதிக்கு இந்த வேலி செல்கிறது. 


இதன் நீளம் 5,300 கி.மீ. எதற்காக இந்த வேலி? இந்தப் பகுதியில் பலநூறு கி.மீ. தூரத்திற்கு செம்மறி ஆட்டுப் பண்ணைகள் உள்ளன.

அவற்றைப் பாதுகாக்கவே இந்த வேலி! இந்த பூமியில் எண்ணெய் வளம் இருப்பதாக கண்டு பிடித்துள்ளனர்.

ஆக இங்கு வருங்காலத்தில் நிலைமை மாறலாம். 

இந்த இடம் நெடுஞ்சாலையில் உள்ளதால் இருபுறமும் செல்பவர்கள், இங்கு சில மணி நேரம் செலவழித்து விட்டு தான் பயணம் மேற்கொள்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings