உலகின் 71 சதவிகித பரப்பை ஆக்கிரமித்து இருப்பது கடல் பரப்பு. பூமியில் உள்ள நீரில் 97% நீர் கடலில் தான் உள்ளது.
இந்தியா மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட தீபகற்பமாக திகழ்ந்து வருகிறது.
இதில் அரபிக்கடல், வங்காள விரிகுடா, இலட்சத்தீவு கடல், அந்தமான் கடல், கட்ச் வளைகுடா,
மன்னார் வளைகுடா, கம்பாத் வளைகுடா, மற்றும் பாக் நீரிணை ஆகிய கடல் பரப்புகள் அமைந்துள்ளன.
இந்த கடல் பரப்பை சுத்தமாக வைத்திருக்கும் உயிரினங்களில் கடல் ஆமை இன்றியமையாதவை.
மன்னார் வளைகுடா, கம்பாத் வளைகுடா, மற்றும் பாக் நீரிணை ஆகிய கடல் பரப்புகள் அமைந்துள்ளன.
இந்த கடல் பரப்பை சுத்தமாக வைத்திருக்கும் உயிரினங்களில் கடல் ஆமை இன்றியமையாதவை.
உலக பெருங்கடல்களில் ஏழுவகை ஆமைச் சிற்றினங்கள் உள்ளன.
இவற்றுள் இந்திய பெருங்கடல் பகுதியில் மட்டும் பச்சை ஆமை, சித்தாமை, அலுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என ஐவகை ஆமைகள் உள்ளன.
இவற்றுள் இந்திய பெருங்கடல் பகுதியில் மட்டும் பச்சை ஆமை, சித்தாமை, அலுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என ஐவகை ஆமைகள் உள்ளன.
காலம் முழுவதும் கடல் நீரிலேயே வசிக்கக் கூடிய ஆமைகள் இனப்பெருக்க காலத்தின் போது மட்டும் கரை பகுதிகளில் வந்து முட்டையிட்டு செல்லுகின்றன.
அதிலும் குறிப்பாக உலகெங்கிலும் உள்ள வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல கடற்கரை பகுதிகளையே முட்டையிட ஆமைகள் தேர்ந்தெடுக் கின்றன.
தமிழகத்தை பொறுத்த மட்டில் கன்னியாகுமரிக் கும், திருச்செந்தூரு க்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதிகளிலும்,
தனுஷ்கோடி மற்றும் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளிலும் ஆமைகள் முட்டை யிட்டு குஞ்சு பொறிக்கின்றன.
தனுஷ்கோடி மற்றும் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளிலும் ஆமைகள் முட்டை யிட்டு குஞ்சு பொறிக்கின்றன.
இவ்வாறு பிறக்கும் ஆமை குஞ்சுகள் தாம் பிறந்த இடத்தின் நிலவியல் அமைப்பு, காந்தபுலம், தோற்றம், நறுமணம் ஆகிய வற்றை
தங்கள் உணர்வில் பதிந்து கொண்டு வளர்ச்சி அடைந்த பின் குஞ்சு பொறிக்க இந்த இடத்தினையே தேர்வு செய்யும் வினோத பழக்கம் கொண்டவை.
சாதுவான குணம் கொண்ட ஆமைகள் சுமார் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழ கூடியவை.
இவை கடல் பாசிகள், சிறு மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்கின்றன.
இவை கடல் பாசிகள், சிறு மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்கின்றன.
கடல் ஆமைகள் தங்கள் சுவாசத்தின் போது கடல் நீரை மாசு படுத்தாமல் சுத்திகரித்து வெளியேற்றும் தன்மை கொண்டவை ஆகும்.
இதனால் ஆமைகளை ‘கடல் சுத்திகரிப்பான்’ என மீனவர்கள் அழைக்கின் றனர். ஆமைக்கு ‘கச்சபம்’ என்ற பெயரும் உண்டு.
இதனால் ஆமைகளை ‘கடல் சுத்திகரிப்பான்’ என மீனவர்கள் அழைக்கின் றனர். ஆமைக்கு ‘கச்சபம்’ என்ற பெயரும் உண்டு.
இதனால் தான் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆமைகளின் புகலிடமாக கச்சத் தீவு இருந்து வந்தது.
இதனால் தான் இந்த தீவு ‘கச்சத் தீவு’ என்று அழைக்கப்படுகிறது.
இதனால் தான் இந்த தீவு ‘கச்சத் தீவு’ என்று அழைக்கப்படுகிறது.
கடல் நீரை இயற்கை யாகவே சுத்திகரித்து தரும் ஆமைகளின் உயிருக்கு தற்போது பல வகைகளிலும் ஆபத்துகள் நேர்ந்து வருகிறது.
முட்டையிடும் பருவ காலங்களின் போது கரையை நோக்கி வரும் ஆமைகள் இழுவலை யில் சிக்கி உயிரிழப்பதும், கடலில் தூக்கி எரியப்படும் கழிவு பொருட்களா லும்,
இனப்பெருக்க பகுதிகளில் மேற் கொள்ளப்படும் திட்ட மிடபடாத பணிகளாலும் ஆமைகள் அழிந்து வருகின்றன.
இந்த அழிவில் இருந்து ஆமைகளை காக்கவே மே -23 -ம் தேதி உலக ஆமைகள் தினமாக கடந்த 2000-ம் ஆண்டு அறிவிக்கப் பட்டது.
இந்த அழிவில் இருந்து ஆமைகளை காக்கவே மே -23 -ம் தேதி உலக ஆமைகள் தினமாக கடந்த 2000-ம் ஆண்டு அறிவிக்கப் பட்டது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆமைகள் மிட்புக் குழுவினர் ஆமைகள் குறித்த
விழிப்புணர்வு களை பொது மக்களிடையே இந்த நாளில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர்.
விழிப்புணர்வு களை பொது மக்களிடையே இந்த நாளில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இயற்கையின் படைப்பில் உருவான கடல் ஆமைகள் மனிதர்களின் வாழ்க்கையின் ஆதாரமாக திகழும் கடலை காத்து வருகின்றன.
நாமோ அந்த ஆமைகளின் உயிரை காக்க முடியா விட்டாலும் அவற்றின் அழிவுக்கு துணை போகாமல்
இருக்க வேண்டும் என்பதே ஆமைகள் ஆதரவு அமைப்பினரின் கோரிக்கை யாக உள்ளது.
இருக்க வேண்டும் என்பதே ஆமைகள் ஆதரவு அமைப்பினரின் கோரிக்கை யாக உள்ளது.