ஆணுறையை விழுங்கிய பெண்.. அறுவை சிகிச்சையில் நீக்கம் !

1 minute read
கேமரூனில் 26 வயது பெண்ணின் குடலுக்குள் ஆணுறை (காண்டம்) இருந்தது அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று கேமரூன். இங்கு 26 வயது பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது. 
இந்த வலிக்காக மருந்து எடுத்தும், வலி போகவில்லை. தொடர்ந்து வலி அதிகரிக்கவே டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது, குடலில் எதோ ஒட்டிக் கொண்டு இருப்பதை பார்த்துள்ளனர்.

உடனடியாக டாக்டர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு, குடலில் இருந்தவற்றை நீக்கினர். அப்போது அந்த பாகங்கள் ஆணுறையின் பாகங்கள் என்பது தெரிய வந்தது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் வாய் வழியிலான செக்ஸ் உறவு கொண்டபோது, ஆணுறையை தெரியாமல் அந்தப் பெண் விழுங்கி உள்ளார். 

இந்த சம்பவத்தையடுத்து, சில துண்டுகள் மலம் கழிக்கும்போது வெளியேறியுள்ளது. சில பாகங்கள் குடலில் சிக்கிக் கொண்டது. அதைத் தான் டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings