மும்பை காமாத்திபுரா சிங்காரிகள் !

மும்பையின் அடையா ளங்களில் ஒன்று காமாத்தி புரா. பல பெண்களின் கண்ணீர் கதைகளை கொண்ட
அந்த `கண்ணீர் தேசத்திற்குள்’ ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வரலாம் என்று கிளம்பினோம். சும்மா வேணா போய் ரவுண்ட் அடிச்சிட்டு வாங்க.. ஆனா படம் எடுக்க முடியாது. 

அப்படி எடுத்து மாட்டிக் கிட்டீங்கன்னா கேமராவும் உங்களுக்கு சொந்தமில்ல.. நீங்களும் உங்களுக்கே சொந்தமில்ல” என தகவல் சொன்னவர்கள்


கிளம்புவதற்கு முன் ‘சிவப்பு விளக்கு’ எச்சரிக்கை செய்திருந்ததால் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கிளம்பினோம். ( இது தான் பலரின் வாழ்கையை புரட்டிப்போட்ட காமாத்தி புராவின் பிரதான சாலை )

மும்பையின் மையப் பகுதியில் இருக்கும் `மும்பை சென்ட்ரல்’ மற்றும்` க்ராண்ட் ரோடு’ என்ற ரயில் நிலையங் களுக்கு இடைப் பட்ட பகுதியில் இருக்கிறது காமாத்திபுரா. அது ஒரு சின்ன தெரு தான். 

ஆனால் அதை சுற்றி இருக்கும் பல தெருக்களில் குடிசைத் தொழில் போல் விபச்சாரம் நடை பெறுகிறது என்றாலும் காமாட்டி புரா மட்டுமே மும்பை பாலியல் தொழிலுக்கான மொத்த அடை யாளமாக பெயர் பெற்று விட்டது.

வரிசையாக கவர்ச்சி உடையில், அடிக்கும் கலரில் உதட்டுச் சாயத்தை பூசி கொண்டு நின்று கொண்டி ருக்கும் பெண்கள் கண்களால் அழைப்பு விடுத்துக் கொண்டி ருக்கிறார்கள்.
சிலரை கையைப் பிடித்து இழுத்து கூப்பிட்டு பேரம் பேசினார்கள். நமக்கும் அழைப்பு வந்தது.. நிற்காமல் நகர்ந்து கொண்டி ருந்தோம். நின்று பேரம் பேசினீர்கள் என்றால் உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து விடுவார்கள். 

உள்ளே போனப்பிறகு “பொண்ணு பிடிக்கல” என்று முரண்டு பிடிப்பவ ர்களை நாலு போடு போட்டு பணத்தை பறித்துக் கொண்டு விரட்டி விடுகிற கதையும் உண்டு. ப்ரோக்கர்கள் ப்ளஸ் திருடர்கள் இருபக்கமும் நின்று கவனித்துக் கொண்டே இருக்கி றார்கள்.

( எவ்வளவு தருவே.. புரோக்கர் ரமேஷ் )

திடிரென நம்மை நெருங்கிய ஒரு புரோக்கர் நம் முகத்தை வைத்து தமிழ்நாடு என்று தெரிந்து கொண்டு பேச ஆரம்பித்தார். “சார் எங்கிட்ட எல்லா ஸ்டேட் பொண்ணு ங்களும் இருக்கு சார். 

350 ரூபா தான் சார். ஏஸி இருக்கு. ஒரு ப்ராப்ளமும் இல்ல. நீங்க வந்து பாருங்க. பிடிக்க லைன்னா வேணாம்.. கம்பல் இல்ல சார்..” என்று இந்தி கலந்த தமிழில் நச்சரிக்க ஆரம்பித்தார். ”அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்லணே..” என்றதும் ”சரி இது என்கார்டு..

எப்ப வேணும் னாலும் வாங்க” என்று விசிட்டிங்க் கார்ட்டை கையில் தினித்த வரிடம் அவரைப்பற்றி பேச்சுக் கொடுத்தோம்..


”என் பெயர் ரமேஷ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). தஞ்சாவூர் பக்கம். ரொம்ப வருசத்துக்கு முன்னமே பம்பாய் வந்து செட்டில் ஆகிட்டதால ஊர் பக்கம்லாம் போய் ரொம்ப நாளாச்சு சார். லேடீஸ் டான்ஸ் பார்ல வேலை பார்த்தேன். நல்லா காசு கிடைக்கும். 

ஆனா இப்போ அத மூடிட்ட தால இந்த வேலைக்கு வந்தேன். கஸ்டம்ர்கள பிடிச்சு கொடுத்தா ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா தேரும். இப்படி புரோக்கர் வேலை பார்க்கோமேனு சில நேரம் வருத்தமாத் தான் இருக்கும். ஆனா என்ன பண்ண.. அம்மா வீட்டு வேலைக்கு போகுது.
அப்பா வாட்ச்மேன். அண்ணன் அண்ணி எல்லாம் இருக்காங்க. நான் இந்த வேலை பார்க்குறது வீட்ல யாருக்கும் தெரியாது சார். ஹோட்டல்ல வேல பார்க்கேனு சொல்லி ருக்கேன். என்னை க்காவது மாட்டிக்கு வேனோனு பயமா இருக்கு. ஆனா லைஃப்ப ஓட்டணுமே.. 

இதுலயே பழகிட்டதால வேறு வேலைக்கு போக தோணல சார்” என்று தன் வரலாறு சொல்லி முடித்து விட்டு, ’’வாங்க சார்.. பொண்ணுங்கள பாருங்க..” என்று மீண்டும் தனது பிஸினசுக்குள் இறங்கியவ ரிடமிருந்து சிரித்து விட்டு நகர்ந்தோம்.

அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றால் ‘காங்கிரஸ்(!) ஹவுஸ்’ என்ற தெரு உள்ளது. இங்கிருக்கும் விபச்சார விடுதிகள் கொஞ்சம் காஸ்ட்லி யானவை என்பதால் பெண்கள் வெளியே நின்று அழைப்ப தில்லை.

மாறாக புரோக்கர்கள் மட்டுமே வரிசையாக நிற்கிறார்கள். டாக்ஸிக்குள் தலையை விட்டு நம்மை அழைக் கிறார்கள். இரண்டாயிரம் ரூபாயில் ஆரம்பித்து பத்தாயிரம் முப்பதாயிரம் என பெண் களுக்கு ஏற்ப ரேட் ஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

சிலவருடங் களுக்கு முன்பு மகாராஷ்ட்ரா அரசு ’லேடீஸ் டான்ஸ் பார்’களை மூடியதால் அந்த தொழிலில் இருந்த பெண்கள் பலர் இப்போது வேறு வழியின்றி விபச்சாரத் தொழிலுக்குள் தள்ளப் பட்டிருக் கிறார்கள். 

அவர்களில் பலர் இங்கு தான் தொழிலில் ஈடு பட்டிருக் கிறார்கள். அதே போல் பெரும்பாலும் பாலியல் தொழிலுக்கு கடத்தி வரப்படும் பெண்கள் இந்த விடுதிகளில் தான் விற்கப்ப டுகிறார்கள் தமிழ் பெண்கள் உட்பட. 

இங்கு சக்கையாக பிழிந்த பிறகு லோக்கல் விடுதிக ளுக்கு தள்ளப்படு கிறார்கள். இங்கிருக்கும் விடுதிகள் அமைதி யாகவும் மர்மமாகவும் அச்சமூட்டும் வகையில் இருக் கின்றன. 


சமீபத்தில் கப்பல் வேலைக்காக தமிழகத் திலிருந்து மும்பை வந்த தனது நண்பர்கள் சிலர் சபலப்பட்டு இந்த விடுதிக்குள் நுழைந் ததாகவும், அவர்களை சிலர் அடித்து பணத்தை பறித்துக் கொண்டு விரட்டிய சம்பவம் நடந்ததாக சொல்கிறார் மும்பை தமிழரான தினகரன்.

(மும்பை தமிழர் தினகரன்)

அங்கிருந்து சில நிமிட தூரத்தில் `பீலா ஹவுஸ்’ (மஞ்சள் வீடு) என்று அழைக்க ப்படும் தெருவுக்குள் நுழைந்தால் அதிர்ச் சியாக இருக்கிறது. இளம் பெண்களோடு சிறுமிகளும் நின்று கொண்டு அழைப்பு விடுக்கி றார்கள். 

நமக்கு நெஞ்சம் பதைபதை க்கிறது. இளைஞர்கள், பெருசுகள் என எந்த வித்தி யாசமும் இல்லாமல் ஒரு பக்கம் பேரம் நடந்து கொண்டிரு க்கிறது.

( டீல் ஓகே  என்ன ரேட்டு? )

பெரு வாரியாக இங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டி ருக்கும் பெண்கள் பெங்காலி களாகவும், நேபாள், உ.பி, பிஹார், ஆந்திரா, கர்நாட காவை சேர்ந்தவ ர்களாக இருக்கிறார்கள். 

குழந்தை குட்டி என்று குடும்ப த்தோடு அங்கேயே வாழ்பவ ர்களும் உண்டு. தொழிலுக்கு தொந்தர வில்லாமல் இருக்க அங்கு பிறக்கும் குழந்தைகள் படிப்பத ற்காக இரவு பள்ளிகளை என்.ஜி.ஓ.க்கள் நடத்துகின்றன..

மனதளவில் இந்த தொழிலை சகித்துக் கொள்ள கற்றுக் கொண்ட வர்களை மட்டுமே வெளியில் நின்று வாடிக்கை யாளர்களை அழைக்கும் பணிக்கு அனுப்பு கிறார்கள். உள்ள றைக்குள் அழைத்து வரப்படும் வாடிக் கையாளர்க ளுக்காக பல பெண்கள் காத்துக் கொண்டிருக் கிறார்கள்.

( யூனிஃபார்ம்? )

சிக்கினால் பென்டெடுத்து விடுவார்கள் என்ற சூழலில் மறைவாய் நின்று சில படங்களை எடுத்துக் கொண் டிருந்தோம். பயந்தது போலவே புரோக்கர் ஒருவர் நம்மை பார்த்து விட்டு ”போட்டோ கீச்ராரே.. பக்கடோ..” (படம் புடிக்கிறான்.. புடிடா..) என்று சகாக்களுக்கு சவுண்ட் விட்டுக் கொண்டு நம்மை விரட்ட அங்கிருந்து ஓடி தப்பித்தோம்.

( பேரம் பேசும் விடலைகள் )

பெருவாரியாக இங்கு வரும் வாடிக்கை யாளர்கள் உ.பி. பிஹார் உள்ளிட்ட வட மாநில ங்களில் இருந்து மும்பையில் கட்டிட வேலைகள் உள்ளிட்ட கூலி வேலைக ளுக்காக அழைத்து வரப்படும் இளைஞர் களாகவே இருக்கி றார்கள். 


அவர்கள் குடும்ப த்தை விட்டு மும்பையில் தனிமையில் இருப்ப துவும், 50 ரூபாயில் இருந்து பெண்கள் கிடை ப்பார்கள், போலீஸ் தொந்தரவு இருக்காது போன்ற காரண ங்களால் அவர்கள் இந்த விடுதிக ளுக்கு வருகிறார்கள்.

அந்த தெருவில் இரண்டு பிட்டு பட தியேட்டர்கள் இருக் கின்றன. வெளியே போஸ்டர்கள் ஏதாவது ஒட்டப் பட்டிருக்கும்.. உள்ளே பெருவா ரியாக ’பிட்டு’ படங்கள் ஓடும். முதலில் திரையரங் குக்குள் நுழைந்து அதை பார்த்த போதையோடு பாலியல் தொழிலாளி களிடம் செல்கிறார்கள்.

(விபச்சார விடுதி களுக்கு நடுவில் பிள்ளையார் விழா கொண்டா ட்டம்! )

மும்பை பெண்களை காமுகர்களி டமிருந்து காப்பாற்றும் `எல்லை தெய்வங் களாக’ நிற்கிறார்கள் காமாட் டிபுராவில் இருக்கும் பெண்கள். அவர்கள் இல்லை யென்றால் பாலியல் குற்றங் களின் எண்ணிக்கை பலமடங்காகி விடும்” என்று சொல்கி றார்கள்.அதில் உண்மை யுண்டு.

என்.ஜி.ஓ. க்களின் தீவிரமான எய்ட்ஸ் விழிப் புணர்வு பிரச்சார த்தால் ’காண்டம்’ போட்டால் மட்டும் தான் செக்ஸ் என்பதில் அந்த பெண்கள் உறுதியாக இருந்தாலும் சிலர் எய்ட்ஸில் சிக்கி இறந்து போகிறார்கள். `

தாங்கள் அழகாக நின்ற அதே தெருவின் ஓரத்தில் ஒருநாள் அநாதைப் பிணமாக செத்துக் கிடந்த பல ’தெய்வங் களின்’ கண்ணீர் கதைகளை சுமந்து நிற்கின்றன ஒவ்வொரு விடுதிகளும்..

காமாத்தி புராவை மூட திட்டம்! ( காமாத்திபுரா பெயர் பலகை )

1795 கால கட்டத்தில் கட்டுமான பணிகளு க்காக ஆந்திராவி லிருந்து அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகள் வாழ்ந்த பகுதி காமாத்திபுரா. இந்தியில் `காம்வாலி’ என்றால் வேலைக்காரி என்று அர்த்தம். 

அந்த அடிப்படை யிலும் அந்த பகுதிக்கு காமாத்திபுரா என்ற பெயர் புழக்க த்திற்கு வந்திரு க்கலாம் என்கிறார்கள். பிற்பாடு 1880 பிரிட்டிஷ் ஆட்சியில் அந்த பகுதி ராணுவ பாதுகாப்பு வளைய மாக்கப்ப ட்டிருந்தது.

ராணுவ வீரர்களின் செக்ஸ் வெறியை தீர்த்துக் கொள்ள அங்கிருந்த பெண்கள் தள்ளப்ப ட்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து அவர்கள் நடையைக் கட்டிய பிறகு அவர்களின் இடத்தை இந்திய பணக்கா ரர்கள் பிடித்துக் கொண்ட தால் வேறு வழியின்றி
அந்த பெண்கள் அதே தொழிலை தொடர்ந் தார்கள்.. இன்னும் தொடர்ந்து கொண்டிரு க்கிறார்கள்..ஒரு தெருவில் பாதிவரை விபச்சார விடுதிகளும், மீதி குடும்பங்கள் வாழும் குடியிருப் புகளும் என விநோதமாக இருக்கிறது காமாத்திபுரா.

பெருவாரியாக இங்கு குஜராத்தி, மார்வாடிகள் இருக்கி றார்கள். அவர்களின் குழந்தைகள் அந்த விடுதிகளின் வழியாகவே பள்ளிக்கு செல்கிறா ர்கள் என்பது அதிர்ச்சி யாக இருக்கிறது. 

தாங்கள் எந்த பகுதியி லிருந்து வருகிறோம் என்பதை சொல்ல சங்கடப்படும் மனநிலை அந்த குழந்தை களிடம் இருக்க கூடும். ஆனால் மும்பையின் வாழ்விட நெருக்கடி எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வைக்கிறது.

( சாலையை ஒட்டியிருக்கும் கட்டிடம் முழுக்க விபச்சாரம் தான் )

தற்போது காமாத்தி புராவின் நில மதிப்பு ஒரு சதுர அடிக்கு தோராயமாக 30 ஆயிரம் என்கி றார்கள். நிலங் களின் மதிப்பு கூடுவதால், இவ்வளவு நாட்கள் அதை வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்த நில உரிமை யாளர்கள்

இப்போது விடுதிகளை மூடிவிட்டு காம்ப்ளக்ஸ், அடுக்குமாடி குடியிருப் புகளை கட்ட திட்டமி ட்டிருக்கி றார்களாம்.


பல கிரிமின ல்களின் புகழிடமாக திகழ்வதால் காமாத்தி புராவை மூடும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு செயல் படுத்த கூடும் என்ற கருத்தும் இருக்கிறது, அப்படியே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டினாலும் அப்போதும் விபச்சாரம் தான் நடக்கும்.. 
என்ன கொஞ்ச காஸ்ட்லியான விபச்சார விடுதிகளாக இருக்கும் என்றும் சொல்கி றார்கள். ஆனால் பல வருடங் களாக அங்கேயே தங்கள் வாழ்வை தொலைத்த பெண்கள் காமாத்தி புராவை மூடினால் எங்கு செல்வது.. 
மேலும்
என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கி றார்கள். அந்த பெண்களின் மறுவாழ் வுக்காக எதையும் செய்யாமல் அரசு காமாத்தி புராவை முடினால் அது பிரயோஜன மற்றதாகவே இருக்கும்.
Tags:
Privacy and cookie settings