தீப்பிடித்த வீடு... ஹெட்செட் மாட்டிக் கொண்டு கணணியில் விளையாடிய இளைஞர் !

சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் உடைமைகளை இழந்ததோடு மட்டுமல்லாமல், 
தீப்பிடித்த வீடு... ஹெட்செட் மாட்டிக் கொண்டு கணணியில் விளையாடிய இளைஞர் !
அண்டை வீட்டாரோடு நட்புறவுடன் பழகிய நாட்களை மறக்க முடியாமல் அக்குடியிருப்பு வாசிகள் தவித்து வருகின்றனர்.

கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த Maria Haliti என்பவரின் வீட்டிற்கு ஜேர்மனியில் இருந்து 20 உறவினர்கள் வந்துள்ளனர்.

உறவினர்களுக்காக Maria உணவு சமைத்துக் கொண்டிருந்த போது, அக்குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் ஓடிய சத்தம் கேட்டுள்ளது, மேலும் தீப்பிடித்து எரிந்த மணமும் வந்துள்ளது.

உடனே, Maria- வும் தனது உறவினர்களோடு, குடியிருப்பை விட்டு தப்பியோடியுள்ளார், 
ஆனால் வீட்டிற்குள் அமர்ந்திருந்த இவரது 19 வயது மகனுக்கு தீப்பிடித்த சம்பவம் எதுவும் தெரியாமல் காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு கணனியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

இதனை அறிந்த Maria,மீண்டும் விரைந்து சென்று தனது மகனை காப்பாற்றியுள்ளார், 

இந்த சம்பவத்தில் Maria- வின் ஒட்டு மொத்த குடும்பம் மற்றும் அக்குடியிருப்பு வாசிகளுக்கும் எவ்வித உயிர்சேதமும் ஏற்டவில்லை,

இந்த தீவிபத்தால், ஆயிரக்கணக்கான பிராங்க் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது, 

விசாரணையில் குடியிருப்பு வாசிகளில் ஒரு குடும்பத்தினர் பயன்படுத்திய இறைச்சி வாட்டும் இருப்பு பாத்திரத்தில் இருந்து தீப்பிடித்துள்ளது,
அதன் மூலம் குடியிருப்பில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சேதமடைந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடைபெற்று நாட்கள் கடந்து விட்ட நிலையில், குடியிருப்பை விட்டு வெளியேறிய Maria குடும்பத்தினர்,வேறு ஒரு இடத்தில் வசித்து வருகின்றனர். 

ஆனால் உடமைகள் அனைத்தையும் இழந்து விட்டோம், மேலும் அக்குடியிருப்பில் நாங்கள் வசித்த போது அருகில் வசிப்பவர்களுடன் நட்புறவுடன் பழகினோம், 

அதனை யெல்லாம் தற்போது இழந்து வாடுகிறோம். மேலும் நாங்கள் விரைவில் குடியிருப்புக்கும் குடியேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது Maria தெரிவித்துள்ளார்
Tags:
Privacy and cookie settings