வாக்குப்பதிவின் போது போலீஸ்காரர் மயக்கம் !

0 minute read
சென்னையில் வாக்குச்சாவடியில் மயங்கிவிழுந்த காவலருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார் பாஜக தலைவரும் அத்தொகுதியின் வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன்.
விருகம்பாக்கம் பாலலோக் பள்ளியில் இன்று காலை விறுவிறுப்பாக வாக்களிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது அத்தொகுதியின் வேட்பாளரும் பாஜக தமிழக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வாக்களிக்க வந்தார். 

வாக்காளர்களின் வரிசையில் அவர் நின்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு பணியில் இருந்த சூர்யா என்ற காவலர் திடீரென மயங்கிவிழுந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உடனடியாக தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப்பின் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த காவலர் மேற்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

வாக்களிக்க வந்த இடத்தில் வேட்பாளர் மயங்கிவிழுந்த காவலருக்கு சிகிச்சையளித்த சம்பவத்தை கண்டு அங்கிருந்த வாக்காளர்கள் ஆச்சர்யமடைந்தனர். தமிழிசை சௌந்தரராஜன் பிரபல மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings